tamilnadu

img

ஆர். பாலகிருஷ்ணனுக்கு முதல்வர் வாழ்த்து

ஆர். பாலகிருஷ்ணனுக்கு முதல்வர் வாழ்த்து'

சென்னை தரமணி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர். பால கிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூக வலைதள பக்கத்தில், “தமிழ் வழியில் படித்து, தமிழி லேயே குடிமைப் பணித் தேர்வு எழுதி ஐஏஎஸ் ஆகி,  தமிழாராய்ச்சியின் பரப்பைத் தமிழகத்தையும் தாண்டி, ஏன் இன்றைய இந்திய நாட்டையும் தாண்டி அகலப்படுத்திய அறிஞர் பாலகிருஷ்ணன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவ னத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதையொட்டி மகிழ்ச்சி  நிறைந்த மனத்தோடு வாழ்த்தினேன். 1812-இல் வெளியான திருக்குறளின் முதல் அச்சுப் பதிப்பை அன்பளிப்பாகத் தந்தார். அவர் பணி சிறந்து, தொல்தமிழர் வரலாற்றின் பல  புதிய பக்கங்களை உலகுக்கு வெளிக்காட்டட்டும்” என்று கூறியுள்ளார்.