சென்னை, மார்ச் 1 - தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், வெள்ளியன்று (மார்ச்1) 71-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய நிலையில், அவ ருக்கு குடியரசுத் தலைவர் திரௌ பதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல்வேறு மாநில முதல் வர்கள், ஆளுநர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரைக்கலை ஞர்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர். “உங்களின் பிறந்த நாளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரி வித்துக் கொள்கிறேன். உங்க ளுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும், மேலும் பல ஆண்டுகள் தொடர்ந்து நாட்டிற்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்ய வும் இறைவன் அருளட்டும்” என குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வாழ்த்துச் செய்தி வெளி யிட்டுள்ளார். குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தொலை பேசியில் அழைத்து வாழ்த்து தெரி வித்துள்ளார். “முதல்வர் ஸ்டாலின் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன்” என பிரத மர் நரேந்திர மோடி தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் வாழ்த்தை பதிவிட்டுள்ளார். “தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீண்ட ஆயுளுடன் நலமாக வாழவேண்டும்” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார் ஜூன கார்கே கூறியுள்ளார். “தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்க ளுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என்று ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். “முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் நீண்ட மற்றும் ஆரோக்கி யமான வாழ்க்கை வாழ வாழ்த்து கிறேன்” என தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி யில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் - மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் கே. பாலகிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செயலாளர் இரா. முத்தர சன், காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்.பி., விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., கொமதேக தலைவர் ஈ.ஆர். ஈஸ்வரன், ஐயுஎம்எல் தலைவர் காதர் மொய்தீன், தவாக தலைவர் வேல் முருகன் எம்எல்ஏ,மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ உள்ளிட் டோர், முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த னர். “தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள், மகிழ்ச்சி மற்றும் வெற்றியை அருள்வாராக!” என பீகார் மாநில முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வியும், “தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வரும் ஆண்டுகள் மிகுந்த மகிழ்ச்சியும், நல்ல ஆரோக்கியமும் மற்றும் வெற்றிகள் நிறைந்ததாகவும் இருக்கட்டும்” என உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷூம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கேரள முதல்வர் வாழ்த்து
கேரள முதல்வர் வாழ்த்து தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினின் 71-ஆவது பிறந்த நாளையொட்டி, அவருக்கு கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், சமூகவலைதளத்தில் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். “தோழர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், நமது அரசியலமைப்பில் பொதிந்துள்ள ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற விழுமியங்களைப் பாதுகாப்பதில் உங்கள் உறுதியான நிலைப்பாடு மிகவும் ஊக்கமளிக்கிறது. நீங்கள் எல்லையில்லா மகிழ்ச்சியுடனும், நல்ல ஆரோக்கியத்துடன் திகழவும், தொடர்ச்சியான வெற்றிகளை பெறவும் வாழ்த்துகிறேன்” என்று அந்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.