சென்னை, மே 29- பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த மாண வர்களுக்கு ‘இளஞ்சூரி யன்’ விருதை ஆசிரியர் முன்னேற்ற சங்க ஐம்பெரும் விழாவில் அமைச்சர் தா. மோ.அன்பரசன் வழங்கி னார். தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் மாநிலத் தலைவர் கு.தியாகராஜன் தலைமையில் திங்களன்று (மே 29) நடைபெற்றது. மாநிலச் செயலாளர் தி.அருள்குமார் வரவேற் றார். மாநிலப் பொருளாளர் உதயகுமார் நன்றி கூறினார். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார். தென் சென்னை நாடாளு மன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் வாழ்த்திப் பேசினார். பின்னர் பல்வேறு துறை களில் சாதனை புரிந்த 70 மாணவ, மாணவிகளுக்கு ‘இளஞ்சூரியன்’ விருது, ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், சிறப்பாக பணியாற்றிய சங்க நிர்வாகிகளுக்கு “சிறந்த ஆசிரியர்” விருது ஆகியவற்றை அமைச்சர் தா.மோ.அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் வழங்கினர். '
ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் கு.வெங்கடேசன், இரா.தாஸ், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தி.ெஜ.காந்திராஜன் மற்றும் சகோதர சங்கங்களின் நிர்வாகிகள் செ.முத்துசாமி, ஆ.ஆறுமுகம், ப.குமார், டி.வீரமணி, ந.சண்முகநா தன் உள்ளிட்ட பலர் வாழ்த்திப் பேசினர். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சங்கத்தின் மறைந்த முன்னாள் மாநிலச் செயலாளர் ஏ.ரமேஷ் திருவுருவப் படத்தை திறந்து வைத்தும், ஏ.ரமேஷ் எழுதிய பாடலை வெளியிட்டும் சிறப்புரை யாற்றினார். உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன் முடி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் ஆசிரியர்களுக்கு விருது வழங்கி பேசினர். முன்னதாக 53,000 தொகுப்பூதிய ஆசிரியர் களுக்கு காலமுறை ஊதி யம் வழங்கி ஆணை பிறப் பித்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி யின் பேனாவை நினைவு கூறும் வகையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 53,000 பேனா வழங்கப் பட்டது. ஆசிரியர் முன் னேற்ற முழக்கம் இதழ் வெளியிடப்பட்டது. ஜாக்டோ- ஜியோ போராட்ட காலங்களில் கடந்த ஆட்சியில் எடுக் கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டதை ரத்து செய்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தும் புதிய ஓய்வூ திய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.