மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஈரோடு மாவட்டக்குழுவின் புதுப்பிக்கப்பட்ட அலுவலகத்தை பிரகாஷ் காரத் ஞாயிறன்று திறந்து வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக்குழு அலுவலகமான தோழர் டி.பி.முத்துசாமி நினைவகம், பெருந்துறை சாலையில் செயல்பட்டு வருகிறது. கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கட்டடம் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா ஞாயிறன்று நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், மாவட்டக்குழு அலுவலகத்தை திறந்து வைத்தார். அலுவலகத்தின் மேல்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள தோழர் ஏ.எம்.காதர் நினைவரங்கினை மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம் கல்வெட்டினை திறந்து வைத்தார். முன்னதாக, மூத்த தலைவர் ப.மாரிமுத்து கொடியேற்றி வைத்தார். டி.பி.எம்.பழனியம்மாள் தலைவர்களின் படங்களைத் திறந்து வைத்தார். மாநிலக்குழு உறுப்பினர் வீ.அமிர்தலிங்கம் வாழ்த்திப் பேசினார். அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.