tamilnadu

img

நோயாளிகள் போராட்டமும்... உயிர்த்துடிப்பு மிக்க போராட்டமும்.... ஆக்சிஜன் லாரி வருகைக்காக நள்ளிரவு வரை காத்திருந்த அமைச்சர், மக்களவை உறுப்பினர்....

மதுரை:
மதுரை அரசு இராஜாஜி  கொரானா சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நள்ளிரவில் தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் ஆகியோர்  நள்ளிரவில்  ஆக்சிஜன் லாரி வரும்வரை காத்திருந்துபணிகளை முடுக்கிவிட்டனர்.மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்  உள்ள கொரோனாசிறப்பு சிகிச்சைப் பிரிவில் சுமார்1,500 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இங்கு ஞாயிறு மாலை மூன்றுமணிக்கு வரவேண்டிய ஆக்சிஜன்  லாரி இரவு பத்து மணி வரைவந்துசேரவில்லை.அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு  வரவேண்டிய ஆக்சிஜன் லாரி  கால தாமதமாகியது,குறித்து அறிந்தஅமைச்சர் நள்ளிரவு நேரத்தில்  மருத்துவமனைக்கு சென்று ஆய்வுமேற்கொண்டார். அமைச்சர் மூர்த்தியுடன், மதுரைமக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் வந்திருந்தார்.மருத்துவமனை முதன்மையர் சங்குமணி, மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் செந்தில் குமாரி கூடுதல் ஆட்சியர் உள் ளிட்டோரை நேரில் அழைத்து விவரங்களைக் கேட்டறிந்தனர்.  பின்னர்  வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி மதுரை தனியார் ஆக்சிஜன் தயாரிப்பு மையத்திற்கு உடனடியாக சென்று அங்கிருந்து ஆக்சிஜன் கிடைக்க ஏற்பாடு செய் தார்.தொடர்ந்து இரவு இரண்டு மணி வரை மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், அமைச்சர் பி.மூர்த்தி, மருத்துவமனை முதன்மையர் சங்குமணி ஆகியோர் ஆக்சிஜன் முழுமையாக தொட்டியில் நிரப்பும் வரைகாத்திருந்தனர்.

ஆக்சிஜன் வந்து சேர்ந்ததன் மூலம் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு மூச்சுக் காற்று கிடைத்துவிட்டது என கலங்கிய கண்களோடு புறப்பட்டுச் சென்றனர். இந்த நிலையில் செவ்வாயன்று காலை பல தொற்றாளர் கள் தங்களுக்கு ஆக்சிஜன் செலுத் தப்படுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். சிலர் தங்களுக்கு கொடுக்கப்படும் ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கிறது. சற்று அதிகப்படுத்தினால் நல்லது என தங்களுக்கு ஏற்பட்டுள்ளசிரமங்களையும் தெரிவித்தனர். இது குறித்து மருத்துவமனை வட்
டாரத்தில் விசாரித்தபோது, “ஒவ்வொரு நோயாளிக்கும் எந்தளவிற்கு தேவை என்பதை அறிந்து வழங்குகிறோம். எல்லோரையும் காப்பாற்றுவோம் என நம்பிக்கைதெரிவித்தனர்.ஆக்சிஜன் நிலை குறித்து சு.வெங்கடேசன் கூறியதாவது:“மதுரைக்கு வர வேண்டிய ஆக்சிஜன் இரண்டு மணி நேரம்தாமதாக வரும் என்ற நிலை.நிலைமையை யோசிக்கவே பெரும் பதற்றம். பெரும்படை களத்தில் இறங்கி நிலைமையைச் சமாளிக்க மாற்று ஏற்பாடுகளைச் செய்ய ஆக்சிஜன் திங்கட்கிழமை காலை 1.15 மணிக்கு வந்துசேர்ந்தது. 11 மணியிலிருந்து ஒருமணி வரை பதை பதைப்புடன் இருந்தோம். இன்னும் பணிகளை தீவிரமாக கண்காணித்து பணியாற்ற வேண்டிய தருணம். நோயுடன் நோயாளி நடத்தும் போராட் டத்தை விட உயிர்த்துடிப்போடு நிர்வாகம் போராட வேண்டிய நேரமிது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மாநில கட்டுப்பாட்டு மையத்தோடு பேசிஆக்சிஜன் விரைவாகக் கிடைக்கஏற்பாடு செய்தார். வணிகவரித் துறை அமைச்சர் பெ.மூர்த்தி மதுரையிலுள்ள தனியார் ஆக்சிஜன் நிறுவனங்களுடன் பேசி ஆக்சிஜன் கிடைக்க ஏற்பாடு செய்தார் என்றார்.

இணையதளம் தொடக்கம்
மதுரை மக்களின் நலன் காக்க http://covidfreemadurai.inஎன்னும் தரவுதளம் தொடங்கப் பட்டுள்ளது. பெருந்தொற்று காலத்தில் மக்கள் இந்த இணையதளம் தேவையான உதவிகளைப்பெறலாம்.

;