tamilnadu

img

மோடி அரசின் வஞ்சனைக்கு எதிராக ஆவேசம்..... மாவட்டங்கள் தோறும் இடதுசாரிக் கட்சிகள், விசிக ஆர்ப்பாட்டம்...

எரிபொருட்கள் விலையை கடந்த 54 நாட்களில் 30 முறை உயர்த்தி மக்கள் மீது கொடிய தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுள்ள ஒன்றிய மோடி அரசை கண்டித்தும்; கொரோனா பெருந்தொற்றின் அடுத்த அலையிலிருந்து மக்களை காத்திட முன்னெச்சரிக்கையாக அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்திட வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பல நூற்றுக்கணக்கான மையங்களில் ஜுன் 28, 29, 30 தேதிகளில் மாபெரும் போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இடதுசாரிக்கட்சிகள், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி ஆகியவை கூட்டாக திங்களன்று போராட்டத்தை துவக்கியது.    

;