tamilnadu

குடிநீருக்கான நீர் மாசுபடாமல் தடுக்க வைகை ஆற்றில் சிசிடிவி கேமிரா பொருத்தி கண்காணிக்க உத்தரவு

மதுரை,நவ. 1- குடிநீருக்கான நீர் மாசுபடாமல் தடுக்க வைகை ஆற்றில் சிசிடிவி கேமிரா பொருத்தி கண்காணிக்க வேண்டும் என்று மதுரை மாநக ராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இதுகுறித்து சிவகங்கையைச் சேர்ந்த சங்கர் என்பவர் தாக்கல் செய்த மனு மீது  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணை நடை பெற்றது. அப்போது, வைகை ஆறு தேனி, திண்டுக்கல், மதுரை, சிவ கங்கை, விருதுநகர், இராமநாதபுரம் மாவட்டங்களை செழிக்க வைக் கிறது. சிவகங்கை ஆதனூர் கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் விவசாயத்தை சார்ந்து வாழ்ந்து வருகின்றனர். ஆத னூர் கண்மாயின் கொள்ளளவு 22.87  மில்லியன் கன அடி ஆகவும், பாசன பரப்பு 220.49 ஏக்கர் ஆகவும் உள்ளது.  வைகை ஆற்றில் இருந்து நீர் திறந்து ஆதனூர் கண்மாய்க்கு விவசாய பயன் பாட்டிற்கு தண்ணீர் சேமித்து வைக்கப் படும் என்று மனுவில் தெரிவிக்கப் பட்டிருந்தது.  அரசுத்தரப்பில், மதுரை வைகை கரையோரம் மாநகராட்சி சார்பில் குப்பை தொட்டிகள் வைக்கப் பட்டு உள்ளன. குடியிருப்போர் வைகை ஆற்றில் கழிவுகளை கொட்டி செல்கின்றனர் என தெரிவிக்கப் பட்டது.  இதைத் தொடர்ந்து நீதிபதிகள், ஒருவருக்கு அடிப்படை உரிமைகள் இருப்பதை போல், அடிப்படை கட மைகளும் இருக்கின்றன. வைகை  ஆற்றில் வாகனங்களை கழுவுகிறார் கள். இதை நான் நேரிலேயே பார்த்தி ருக்கிறேன். குடிநீருக்கு பயன்படும் வைகை ஆற்றை தூய்மையாக வைத்திருக்க வேண்டாமா? என கேள்வி எழுப்பினர். மேலும், நகர் பகுதிகளில் வைகை  ஆற்றில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும்.  வைகை ஆற்றில் குப்பை கொட்டு வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வைகை ஆற்றை தூய்மை யாக வைத்திருக்க மதுரை மாநக ராட்சி, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட னர். இந்த மனு தொடர்பாக சிவ கங்கை மாவட்ட ஆட்சியர்  பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.