tamilnadu

img

எதிர்க்கட்சிகள் போராட்டம்; நாடாளுமன்றம் முடங்கியது

எதிர்க்கட்சிகள் போராட்டம்; நாடாளுமன்றம் முடங்கியது 

‘பஹல்காம்’ விவகாரத்தில்  பிரதமர் மோடி  ‘மவுனம்’

புதுதில்லி, ஜூலை 21 - நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்,  திங்கட்கிழமை (ஜூன் 21) அன்று கூடிய நிலை யில், பிரதமர் நரேந்திர மோடி,  வழக்கம் போல-  எதிர்க்கட்சிகள் எழுப்பும் எந்த கேள்விக்கும் பதில் சொல்வதில்லை என்ற தமது ‘மவுன விர தத்தை’ துவங்கினார். இதனால், முதல்நாளி லேயே நாடாளுமன்றம் முடங்கியது. முதலில் 12 மணி வரையும், பின்னர் 2 மணி  வரையும், அதற்கடுத்து 4 மணி வரையும் ஒத்தி வைக்கப்பட்ட மக்களவை, பின்னர் நாள் முழு வதும் ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்  தொடர், திங்கட்கிழமை (ஜூலை 21) அன்று  துவங்கியது. ஆகஸ்ட் 21 வரை இக்கூட்டத்தொ டர் நடைபெற உள்ள நிலையில், தேசிய விளை யாட்டு நிர்வாக சட்ட மசோதா, சுரங்கங்கள் மற்றும் தாதுக்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்கு முறை) சட்டத்திருத்த மசோதா உள்பட 8 மசோதாக் களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. மறுபுறத்தில், கூட்டத்தொடரின் முதல் நாளி லேயே அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து  விட்டு பஹல்காம் தாக்குதல் விவகாரம், ஆபரே சன் சிந்தூர், அகமதாபாத் விமான விபத்து, பீகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி, கீழடி அகழாய்வு குறித்து விவா திக்க வேண்டும் என காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்களை சபாநாயகரிடம் வழங்கியிருந்தன. காலை 11 மணியளவில் மக்களவை கூடிய வுடன், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு  சபாநாயகர் ஓம் பிர்லா இரங்கல் குறிப்புகளை வாசித்தார். பஹல்காம் பயங்கரவாத தாக்குத லில் 26 பேர் உயிரிழந்ததற்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த சபாநாயகர், ‘பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் துளிகூட ஏற்காது’ எனக்  குறிப்பிட்டார். இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதாகவும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும் சபாநாயகர் இரங்கல் தெரிவித்தார். அதன் பின்னர், கேள்வி நேரம் தொடங்கி யது. அப்போது, இந்தியா - பாகிஸ்தான் சண்டை தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்  கூறிய கருத்துக்கள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அவைக்கு அறிக்கை தாக்கல்  செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத் தின. மேலும், டொனால்டு டிரம்ப்பின் கருத்து  தொடர்பாக பிரதமர் மோடி பதில் அளிக்க  வேண்டும் என்றும் வலியுறுத்தினர். முன்னதாக கூட்டத் தொடர் தொடங்கு வதற்கு முன்பு, நாடாளுமன்றத்திற்கு  வெளியே  பிரதமர் நரேந்திர மோடி, “நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் மிகவும் முக்கியமானது. ஆபரேசன் சிந்தூரில் இந்தியாவின் ராணுவ பலத்தை உலக நாடுகள் கண்டு வியந்தன. ஆப ரேசன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் பயங்கர வாதக் கட்டமைப்பை புதைத்து விட்டோம். இந்த  பதில் தாக்குதலில் இந்தியா தனது 100 சதவிகித இலக்கை வெற்றிகரமாக நிறைவேற்றியது. ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பயங்கர வாதிகளின் இருப்பிடம் 22 நிமிடங்களில் தரை மட்டமாக்கப்பட்டது” என்றார். ஆனால், இதையே நாடாளுமன்றத்தில் அறிக் கையாக தாக்கல் செய்து, எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு பிரதமர் மோடி  அஞ்சி நடுங்குவது ஏன் என்றும்; போரை நிறுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறிய கருத்து குறித்து விளக்கம் அளிக்கக் கோரி யும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுந்து நின்று முழக்கமிட்டனர். நாடாளுமன்றத்திற்கு வெளியி லேயே பேசி விட்டுச் செல்வதற்கு எதற்கு நாடாளு மன்றக் கூட்டத் தொடர் என்றும் கேள்வி எழுப்பினர். எனினும், இதுதொடர்பாக விவாதங்கள் நடத்திட சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்க மறுத்த தால், அவையில் அமளி ஏற்பட்டது. இதனால், முதலில் 12 மணி வரையும், பின்னர் நண்பகல் 2  மணி வரையும், அதைத்தொடர்ந்து, 4 மணி வரை யுமாக 3 முறை ஒத்திவைக்கப்பட்ட மக்களவை,  இறுதியாக நாள் முழுவதும் ஒத்திவைக்கப் பட்டது.