tamilnadu

img

மறைந்த க.ஜான்மோசஸ் படத்திறப்பு...

மதுரை:
தமிழக மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்த க.ஜான்மோசஸ் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மதுரையில் காலமானார். அவரது பணிகளை பாராட்டும் வகையில் புகழஞ்சலிக் கூட்டம் மதுரையில் சனிக்கிழமை நடைபெற்றது.இந்த நிகழ்வில் தமிழக ஆயர் பேரவைதலைவர் அந்தோணி பாப்புசாமி ஜான் மோசஸ் உருவப்படத்தை திறந்துவைத்தார். மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், கோ.தளபதி (திமுக). மு.பூமிநாதன், மஹபூப்ஜான் (மதிமுக), பி.வி.கதிரவன் (அகிலஇந்திய பார்வர்டு பிளாக்), வி.கார்த்திகேயன் (காங்கிரஸ்), பா.கதிரவன் (விடுதலைச் சிறுத்தைகள்), பி.வரதராசன் (புரட்சிக் கவிஞர் மன்றம்), செல்வகோமதி (சோக்கோ அறக்கட்டளை), சி.சே,ராஜன் (சமம் குடிமக்கள் இயக்கம்) உள்ளிட்ட பலர் ஜான்மோசஸ்க்கு புகழஞ்சலி செலுத்தினர்.