tamilnadu

img

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தென் மாவட்டங்களில் அதிகரிப்பு

மதுரை, டிச.4- தமிழக தென் மாவட்டங்களில் குழந்தைகள்  மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல்  வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ள தாகவும், தேனி மாவட்டத்தில்தான் அதிகளவு  போக்சோ வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக வும் தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் குழந்தைகள் மீதான  பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ள தாக தேசிய குற்றப்பதிவு ஆவண காப்பகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக விரிவான செய்திக் கட்டுரை நவம்பர் 22 பிரண்ட்லைன் ஏட்டில் இடம் பெற்றுள்ளது.

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்களில், தேசிய  அளவில் தமிழ்நாடு 4-வது இடத்தில் உள்ளதாக வும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்சோ சட்டத்தின் கீழ் கடந்த 2020 ஆம் ஆண்டு 3090  வழக்குகளில் பதியப்பட்டிருந்த நிலையில், 2021 ஆம் ஆண்டு 4469 வழக்குகள் பதிவாகி  இருக்கின்றன என்று தேசிய குற்றப்பதிவு ஆவண காப்பகத்தின் தரவுகள் தெரிவித்து உள்ளன. பல மகளிர் சிறப்பு நீதிமன்றங்களில் போக்சோ வழக்குகள் வருடக்கணக்காக கிடப்பில் உள்ளன. இதுபோன்ற பாலியல்  வன்கொடுமை வழக்குகளில் குற்றவாளி களுக்கு தண்டனை கிடைக்கும் விகிதம் மிகவும்  குறைவாக உள்ளது. 2014 ஆம் ஆண்டு பதிவான  வழக்குகளுக்கே சமீபத்தில்தான் தீர்ப்பு வழங்கப் பட்டிருக்கிறது.

பெரும்பாலும் கிராமப்புறங்களைச் சேர்ந்த எளிய மக்களின் குழந்தைகளே இத்தகைய வன்கொடுமைகளால் பாதிக்கப்படுகின்றனர். கிராமப்புறங்களில் வசிப்பவர்கள், வேலை  தேடி வெளியூர்களுக்கு சென்று விடுவதால்,  தங்கள் குழந்தைகளை தாத்தா, பாட்டிகளிடமோ  அல்லது உறவினர்களின் பாதுகாப்பிலோ விட்டுச் செல்கின்றனர். இச்சூழலைப் பயன் படுத்திக் கொண்டு, பெரும்பாலும் அக்கம்பக்கத் தினர் மற்றும் உறவினர்களே வன்கொடு மைகளை அரங்கேற்றுகின்றனர்.

உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி

உதாரணத்திற்கு, கடந்த ஜூலை மாதம் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி  ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டு, உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார். இச்சிறுமியின் தாய் சேலம் மாவட்டத்தில் தினக் கூலி தொழிலாளியாக உள்ளார். பாட்டியின் பாதுகாப்பில் இருந்த இச்சிறுமி, தனது பாட்டி பணிபுரியும் அங்கன்வாடி அருகே விளை யாடிக் கொண்டிருந்த போது, அருகிலிருந்த 20  வயது இளைஞர், சிறுமியை கடத்திச் சென்று  பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர்  அச்சிறுமியை உயிருடன் எரித்துள்ளார். பின்னர், அச்சிறுமி 75 கிலோ மீட்டர் தொலை வில் உள்ள மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலை யில், சிகிச்சை பலனின்றி அச்சிறுமி கடந்த மாதம் உயிரிழந்தார்.  அப்போது அவர், போடிநாயக்கனூர் குற்ற வியல் நீதிமன்ற நடுவரிடம் அளித்த வாக்கு மூலத்தில், குற்றவாளியின் பெயரை கூறியதை யடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் 9 (எம்),  10 மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 302 (கொலை) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிந்து  கைது செய்தனர். அவர் மீது குண்டர் சட்டமும்  பதியப்பட்டதால், இவ்வழக்கில் அவரால் ஜாமீன் பெற இயலவில்லை. இத்தகைய போக்சோ வழக்குகளில், குற்றவாளிகள் ஜாமீ னில் வராமல் இருக்க, அவர்கள் மீது குண்டர்  சட்டமும் பதிய வேண்டிய நிலை உள்ளது

இதேபோன்று ஆண்டிபட்டியில் நடந்த மற்றொரு சம்பவத்தில், காது கேளாத, வாய் பேச முடியாத 16 வயது மாற்றுத்திறனாளி சிறு மியை, அக்கம்பக்கத்தைச் சேர்ந்த 2 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதில்  ஈடுபட்ட ஒருவர் சிறுவர். இந்த சம்பவம் நடந்த போது, கணவரை இழந்த அச்சிறுமியின் தாய்  மற்றும் இளைய சகோதரர் ஆகிய இருவரும் வெளியில் சென்றிருந்தனர்.

தென் மாவட்டங்களில்...

தமிழகத்தின் 11 தென் மாவட்டங்களில் இந்த ஆண்டு மட்டும் 500 போக்சோ வழக்கு கள் பதிவாகியுள்ளன. இதில் 153 வழக்கு கள் தேனி மாவட்டத்தில் மட்டும் பதிவாகி யுள்ளன. மேற்கண்ட 11 தென் மாவட்ட காவல் துறையினரும் போக்சோ வழக்குகளில் நடவ டிக்கை எடுக்க துரிதமாக செயல்படுகின்றனர்; மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு பாது காப்பு, மனநல ஆலோசனை வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வரு கின்றனர் என்கிறார் தென் மண்டல காவல் ஆய்வாளர் அஸ்ரா கார்க். மேலும் அவர் கூறுகையில், “இவ்வழக்கு களில் நடவடிக்கை எடுப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு மையங்கள் அமைக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. சம்பவம் குறித்து காவல்துறையின் கவனத்திற்கு வந்தவுடன், இம்மையங்கள் பாதிக்கப்பட்டோரையும், அவரது குடும்பத்தையும் பாதுகாப்பதற் கான நடவடிக்கையை எடுப்பது, பாதிக்கப்பட்ட வருக்கு அரசு மருத்துவமனையில் உடனே  மருத்துவ பரிசோதனை செய்வது, பாதிப்புக்கு  உள்ளானவர்களுக்கு மனநல ஆலோசனை  வழங்குவது உள்ளிட்டவை உறுதிப்படுத்தப் படுகின்றன. பாதிக்கப்பட்ட சிறுமிகளின் வசதிக் கேற்ப சம்பவம் குறித்த அறிக்கையை / வாக்கு மூலத்தை பெண் காவலர்கள் பதிவு செய்கின்ற னர். மேலும், குழந்தைகள் நலக் குழுக்கள் பரிந்துரைக்கும் உதவிகளையும் இந்த சிறப்பு மையங்கள் வழங்குகின்றன. குற்றவாளிகளிட மிருந்து பாதிக்கப்பட்டோரை பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கை களையும் மேற்கொள்கின்றன” என்றார்.

சட்டரீதியான நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கும் போது, போக்சோ வழக்கு களில் பாதிக்கப்பட்டோருக்கு தமிழ்நாடு அரசின் இடைக்கால மற்றும் இறுதி இழப் பீடுத் தொகையை பெற்றுத் தருவதிலும் காவல் துறையினர் அதிக கவனம் செலுத்துவதாகவும் அஸ்ரா கார்க் தெரிவித்தார். இத்தகைய பாலியல் வன்கொடுமை சம்ப வங்களின் வழக்குகளை சட்டரீதியாக விசா ரிக்கும் அதே வேளையில், பெண்கள் மற்றும்  பெற்றோர்களிடம் இதுகுறித்த விழிப்புணர் வையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம் என தேனி மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளரும், மாவட்ட சிறப்பு குழு வின் உறுப்பினருமான பி.உஷா தெரிவித்தார்.

 

;