tamilnadu

img

விவசாயத் தொழிலாளர் மாநில மாநாடு வெற்றிபெற என்.சங்கரய்யா வாழ்த்து

சென்னை, டிச. 1- அகில இந்திய விவசாயத் தொழிலா ளர்களின் 10ஆவது மாநில மாநாடு புதுக் கோட்டையில் பிப்ரவரி 4, 5, 6 தேதிகளில்  நடைபெறுகிறது. மாநாட்டு இலச்சி னையை சுதந்திரப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யா வியாழனன்று (டிச. 1) சென்னையில் வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடியதில் விவசாயிகள் சங்கமும், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பங்களிப்பும் மகத்தானது. ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தின் போது நடை பெற்ற அடக்குமுறைகளில் லட்சக் கணக்கான விவசாயிகள் ஏகாதிபத்தி யத்தை ஒழிப்போம், நிலப்பிரபுத்துவத் தை ஒழிப்போம், விவசாயிகளுக்கு நிலம் வழங்குவோம் என முழக்கமிட்ட தியாக வரலாற்றை மறந்து விட முடியாது என்றார்.

“புதுக்கோட்டையில் நடைபெறக் கூடிய மாநாட்டில் மூத்த தோழர் பெரி.குமாரவேல் கொடியேற்ற உள்ளார். அவர் நீண்டகாலமாக விவசாயத் தொழி லாளர்களுக்காக போராடியவர். கீழ்வெண்மணியில் உயர்ந்து நிற்கக் கூடிய அந்தக் கட்டிடம் இந்திய மக்கள் அனைவருக்கும் வழிகாட்டியாக உள்ளது. ஆனால் அன்று கொச்சியில் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது கீழ் வெண்மணி யில் இந்த துயரச் சம்பவம் நடந்தது. நிலப் பிரபுத்துவத்தை எதிர்த்து கீழ் வெண்மணி யில் நடைபெற்ற வீரம்செறிந்த போராட்டம் நாடு முழுவதும் சமூகப் புரட்சி யின் அடித்தளமாக விளங்குகிறதுஎன்றார். விவசாயிகளும், விவசாயத் தொழி லாளர்களும், ஆலைத் தொழிலாளர் களும் இணைந்து ஒற்றுமையுடன் செயல் பட்டால்தான் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தற்போது புதுக் கோட்டையில் நடைபெறக் கூடிய மாநாடு அந்த ஒற்றுமையைக் கட்டுவதற்கு மேலும் ஓர் உந்து சக்தியாகட்டும். மாநாடு வெற்றிபெற புரட்சிகரமான வாழ்த்துக் களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் சங்கரய்யா கூறினார். இந்த நிகழ்வில் தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ. சண்முகம், விவசாயத் தொழிலாளர் சங்க  மாநிலத் தலைவர் ஏ.லாசர், மாநிலப் பொதுச்செயலாளர் வி. அமிர்தலிங்கம், பொருளாளர் எஸ்.சங்கர்,  மாநிலச் செய லாளர்கள் எம்.சின்னதுரை எம்.எல்.ஏ.,  அ.பழநிசாமி, மாநில துணைத் தலை வர்கள் அ.து.கோதண்டன், பி.வசந்தா மணி ஆகியோர் கலந்து கொண்டனர். 

;