tamilnadu

img

பல்வேறு பிரிவுகளில் தொழில்நுட்ப  பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

   CSE/IT/ Software systems,B.Tech,M.Tech  போன்ற பல்வேறு பிரிவுகளில் தொழில்நுட்ப  பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் கேரள மாநிலம் எழிமாலா கடற்படை பயிற்சி மையத்தில் 2 வருட பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.  மேலும் விபரங்களுக்கு www.joinindianavy.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கவும். விண்ணப்பங்களை நிரப்ப கடைசித் தேதி ஜனவரி 10, 2025 ஆகும்.

ஒன்றிய அரசுப் பணிகளை நிரப்புவதற்கான தேர்வுகள் வரும் ஆண்டின் மத்தியில் வரத் துவங்குகின்றன.  அதற்கான அறிவிக்கை நாள், விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மற்றும் தேர்வு நடக்கும் மாதம் போன்றவை வெளியாகியுள்ளன. அதில் முக்கியமான தேர்வுகள் குறித்த விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.  CHSL மற்றும் MTS ஆகிய இரண்டுமே ஆயிரக்கணக்கான பணியிடங்களுக்கான தேர்வுகளாக இருக்கும். அவற்றிற்கு இன்னும் ஆறு மாத காலம் உள்ளது. தற்போது கல்லூரிகளில் பயின்று கொண்டிருக்கும் மாணவர்கள்(18 வயதை நிறைவு செய்த அனைவரும்) இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.  கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் நிறைவு பெற்ற பிறகே, இந்த இரண்டு தேர்வுகளும் நடைபெறும். தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு ஒன்றிய அரசு அலுவலகங்களில்தான் பணிநியமனம் இருக்கும்.  பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் உள்ளிட்டவற்றை https://ssc.gov.in/ என்ற இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். அறிவிக்கைகளும் இந்தத் தளத்தில் வெளியிடப்படும். விண்ணப்பிப்பதற்கான இணைப்பும் இந்தத் தளத்தில் கிடைக்கும்.