tamilnadu

img

வெண்மணி சங்கமம் - விட்னஸ் படத்திற்கு பாராட்டு விழா

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் 18 ஆவது ஆண்டாக சுமார் 500க்கும் மேற்பட்ட இன்சூரன்ஸ் ஊழியர்கள் வெண்மணி தியாகப் பூமியில் சங்கமித்தனர். முன்னதாக, திருவாரூரில் நடைபெற்ற வெண்மணி சங்கமம் மற்றும்  விட்னஸ் படத்திற்கு பாராட்டு விழா நிகழ்வுக்கு சி.முத்துக்குமார சாமி தலைமையேற்றார். விட்னஸ் பட இயக்குநர் தீபக், ஜி.செல்வா மற்றும் படக் குழுவினர் பங்கேற்றனர். திரைப்படம் குறித்து பணி ஓய்வு பெற்ற  பொது இன்சூரன்ஸ் துணை பொது மேலாளர் பத்மநாபன் உள்ளிட்டோர் பேசினர். க.சுவாமிநாதன் உள்ளிட்ட இன்சூரஸ் ஊழியர் சங்கத் தலைவர்கள் பங்கேற்றனர்.