ஒட்டன்சத்திரம், ஜன.18- ஒட்டன்சத்திரம் அருகே நின்று இருந்த ஆட்டோவில் மோட்டார் சைக்கிள் மோதியதில் அமைச்சரின் பாதுகாப்பு படை அதிகாரி பலியா னார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் சட்டமன்ற உறுப்பினரும். உணவு - உணவு பொருட்கள் வழங்கும் அமைச்சராக அர.சக்கர பாணி உள்ளார். இவரின் பாதுகாப்பு பிரிவு காவல் சார்பு ஆய்வாளராக நல்லுசாமி (வயது 54) என்பவர் பணி யாற்றி வந்தார். செவ்வாயன்று இரவு 8.15 மணியளவில் இடைய கோட்டை அருகே உள்ள அத்தப்பன்பட்டிக்கு சென்று விட்டு திண்டுக்கலுக்கு புறப்பட்டார். இடையகோட்டை- திண்டுக்கல் சாலையில் நவா லூற்கு ஆதிதிராவிடர் காலனியில் நிறுத்தி பயணிகளை இறக்கிக்கொண்டிருந்த ஆட்டோ மீது நல்லுச்சாமி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்தார். திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார். இது குறித்து இடையக்கோட்டை காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி, சார்பு ஆய்வாளர் குமரபாண்டி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.