tamilnadu

தீக்கதிர் மதுரை மண்டலச் செய்திகள்

கிராமசபைக் கூட்டங்கள் புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேறும்?

மதுரை:
மதுரை மாவட்டத்தில் செப்.2 (காந்திஜெயந்தி)-ஆம் தேதி கிராமசபைக் கூட்டங்கள் நடத்த மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவில் ஒன்பது கூட்டப் பொருட்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. தவிர உள்ளூர் மக்களால் கொண்டுவரப்படும் மக்கள் நலன் சார்ந்த விஷயங்களையும் விவாதிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் 420 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக்கூட்டம் நடைபெறவுள்ளது.மிகவும் முக்கியமான தருணத்தில் இந்தக் கூட்டம் நடத்த ஆட்சியர் உத்தரவிட்டிருப்பதற்கு நன்றி தெரிவித்துள்ள விவசாயிகள், “தங்களையும், விவசாயத்தையும் அழித்தொழிக்கும் புதியவேளாண் மசோதாவை நிராகரிக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற் றப்படும் என்றும் இது தொடர்பாக விவசாயிகளுக்கு உரிய தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளதாகவும், விவசாயத்தை ஒட்டுமொத்தமாக கார்ப்பரேட்டுகளுக்கு விற்க முயற்சிக்கும் மத்திய அரசிற்கும் அதற்கு துணை நிற்கும் அதிமுக அர
சிற்கும் எதிராகவும் கண்டனம் தெரிவிக்கப்படுமென்கின்றனர்”.

                                ****************

குடிமராமத்தில் முறைகேடு

மதுரை:
மதுரை மாவட்டம் முழுவதும்  முறையாக குடிமராமத்து பணி நடைபெறவில்லை எனக் கூறி மண்வெட்டி,தட்டு, பதாதையுடன் மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர் புதனன்று புகாரளிக்க வந்திருந்தார்.மதுரை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் 420 ஊராட்சி கிராமங்களில்  குடிமராமத்துப் பணி நடந்துள் ளது, பல இடங்களில் குடிமராமத்து முறையாக  நடைபெறவில்லை. இதில் பல முறைகேடுகள் நடைபெறுகிறது. பணியை முறைப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி  மண்வெட்டி ,தட்டு, பதாதையுடன் மாவட்ட ஆட்சியரிடம்  மதுரை வலைச்சேரிபட்டியை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் புகார் அளித்தார்.

                                ****************

கிராமச்சாவடி அமைக்க கோரிக்கை

மதுரை:
அலங்காநல்லூரை அடுத்துள்ள கள்ளிவேலிபட்டி ஊராட்சிக்குட்பட் தாதகவுண்டன்பட்டியில் கிராமச் சாவடி கட்ட ஒன்றியக் கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர் மானம் நிறைவேற்றப்பட்டது. ஒன்றியக் கவுன்சிலர் பொது நிதியிலிருந்து  ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தத நிலையில்  கள்ளிவேலிபட்டி ஊராட்சித் தலைவர் அமிர்தராஜா கிராமச் சாவடி கட்ட தேர்வு செய்யப்பட்ட இடத்தில் நியாயவிலைக் கடை கட்டப்பட உள்ளதாகவும் இதனால் சம்பந்தப்பட்ட இடத்தில் சாவடி கட்டக் கூடாது எனக்கூறியுள்ளார்.இதையடுத்து ஒன்றியக் கவுன்சிலர் ஜெகதீஸ்வரி உள்ளிட்ட கிராமமக்கள் கிராமத் தேவைக்காக சாவடி அமைத்துத்தர வேண்டும் என்று ஒன்றிய ஆணையாளர் பிரேமராஜனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

                                ****************

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்:
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய பென்சன் திட்டம் தொடர வேண்டும். ஜி.எஸ்.டி.நிலுவை தொகையை மாநில அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும். உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழனியில் மாநிலச் செயலாளர் மங்களபாண்டியன், மேற்கு தாலுகா அலுவலகத்தில்  அக்பர், கிழக்கு வட்டாட்சியர்அலுவலகத்தில் சேகர், ராஜமாணிக்கம்,  ஆட்சியர் அலுவலகத்தில்  வட்டக் கிளைத்தலைவர் விஜயகுமார், சுகந்தி, ஒட்டன் சத்திரத்தில் மாவட்டத் தலைவர் விஜயகுமார், நிலக்கோட்டையில் மாவட்டச் செயலாளர் முபாரக்அலி, முருகேசன், வேடசந்தூரில் மாவட்டப் பொருளாளர் ராஜேந்திரன்  ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

                                ****************

மருத்துவ மாணவி சாதனை

மதுரை:
மருத்துவக் கல்வியின் ஆசிய சமூகம் மற்றும் சண்டிகரில் உள்ள பிஜிஐ மருத்துவக் கல்லூரி (PGI நரம்பியல் சமூகம்) இணைந்து நியூரோஃப்தால் மாலஜி வெப்சரீஸ் தொடர்பான வினாடி வினாபோட்டியை நடத்தியது. இதில் மதுரை மருத்துவக் கல்லூரி நரம்பியல் துறையைச் சேர்ந்த மாணவி மருத்துவர் அமராவதி  இரண்டாவது இடம் பெற்றார். அவருக்கு  ரூ.30,000 ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது. மருத்துவர் அமராவதியை அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையர் ஜெ.சங்குமணி, நரம்பியல் துறைத் தலைவர் முருகன், பேராசிரியர்கள் மணிவண் ணன், ஜஸ்டின் ஆகியோர் பாராட்டினர்.