கடமான்கறி கொண்டு வந்த 4 பேர் கைது
சின்னாளப்பட்டி, ஜன.2- திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே மான்கறி கொண்டு வந்த 4 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னிவாடி அருகே பண்ணப்பட்டி பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகை யில் வந்தவர்களை கன்னிவாடி வனத் துறையினர் பிடித்து சோதனை செய்துள் ளனர். இதில், அவர்களிடம் 5 கிலோ மான்கறி இருப்பது தெரியவந்தது. இதனைய டுத்து 4 பேரையும் கன்னிவாடி வனச்சரக அலுவலகத்தில் வைத்து விசாரணை செய் ததில் கடமான்கறி கொண்டு வந்ததை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, தர்மத்துபட்டியை சேர்ந்த மகேந்திரபிரபு, வெள்ளமரத்து பட்டியை சேர்ந்த பாலசுப்பிரமணி, ரகு பதி மற்றும் கங்காதரன் ஆகிய 4 பேரை யும் வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் முக்கிய குற்றவாளியான கே.சி.பட்டியை சேர்ந்த போஸ் என்பவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
ஜன.4 மதுரையில் குறைதீர் முகாம்
மதுரை, ஜன.2- மதுரை மாநகராட்சி மண்டலம் 1 அலு வலகத்தில் ஜனவரி 4 (செவ்வாயன்று) காலை 10 மணி முதல் 12.30 மணி வரை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் ஆணையாளர் மரு.கா.ப.கார்த்தி கேயன் தலைமையில் நடைபெறுகிறது. இந்த முகாமில் பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன் பெறலாம். எனவே பொதுமக்கள் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி முகக்கவசம் அணிந் தும், சமூக இடைவெளியினை பின்பற்றி யும் அந்தந்த மண்டலங்களில் நடை பெறும் குறைதீர்க்கும் முகாமில் அந்தந்த மண்டலத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் மட்டும் தங்கள் கோரிக்கை மனுக்களை குறைதீர்க்கும் முகாமில் கொடுத்து பயன் பெறுமாறு ஆணையாளர் மரு.கா.ப. கார்த்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார்.
பொங்கல் தொகுப்பு ஆட்சியர் ஆய்வு
சிவகங்கை, ஜன.2- சிவகங்கை மாவட்டத்தில் 4,12,095 குடும்ப அட்டைகளுக்கு 20 வகையான பொங்கல் தொகுப்பு வழங்கப்படுவது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஆய்வு மேற்கொண்டார். மானாமதுரை கிட்டங்கியில் இருந்து பொங்கல் தொகுப்பு நியாயவிலை கடைகளுக்கு எடுத்துச் செல்லும்போது அவை சரியாக இருக்கிறதா என்பதை மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி திடீர் ஆய்வு மேற்கொண்டார். சிவில் சப்ளை கார்ப்பரேஷன் மண்டல மேலாளர் நந்தர்ஷா, மானா மதுரை வட்டாட்சியர் தமிழரசன், கண்கா ணிப்பாளர் அழகர்சாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
கிராம உதவியாளர் தற்கொலை
திருச்சுழி. ஜன.2- விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தாலுகா முத்தனேரி கிராம உதவியாளர் குடும்பத் தகராறு காரணமாக தற் கொலை செய்து கொள்ளப் போவதாக வீடியோ பதிவு செய்து வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகத்தில் முத்தனேரி கிராம உதவியாளராக பணிபுரிந்து வருபவர் பள்ளி மடத்தைச் சேர்ந்த விநாயகசுந்தரம். இவர் கடந்த 31.12.2021 அன்று குடும்பத் தகராறு காரண மாக தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறி வீடியோ பதிவு செய்து அதனை வாட்ஸ்அப்பில் நண்பர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் அனுப்பி உள்ளார். இதையடுத்து ஜனவரி 1 அன்று நள்ளிரவில் தனது வீட்டில் தூக்குப் போட்டு விநாயக சுந்தரம் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், காவல் துறையினருக்கு தகவல் தெரி விக்காமல் அவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் முயன்றதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விநாயக சுந்தரத்தின் உடலை மீட்டு திருச்சுழி அரசு மருத்துவ மனைக்கு கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து திருச்சுழி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் பரவலாக மழை
தேனி, ஜன.2- தேனி மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. தேனி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வரு கிறது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் விவசாயிகள் 2 ஆம் போக நெல்சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ளனர். சனிக்கிழ மையன்று அதற்காக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர் மழை காரணமாக விவசாயிகள் மும்முரமாக விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அணையின் நீர்மட்டம் 140.65 அடியாக உள்ளது. 436 கன அடி நீர் வரு கிற நிலையில் 1200 கன அடி நீர் திறக்கப்படுகிறது. தொடர் மழை காரணமாக வைகை அணைக்கு நீர் வரத்து 1089 கன அடியாக உயர்ந்துள்ளது. சனிக்கிழமை வரை 869 கன அடி வரை திறக்கப்பட்ட நிலையில் ஞாயிறன்று காலை நீர் திறப்பு 669 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53 அடியாக உள்ளது. 125 கன அடி நீர் வருகிற நிலையில் 80 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 3 மாதங்களாக முழு கொள்ளளவில் நீடிக்கிறது. 126.87 அடி நீர்மட்டம் உள்ளது. இதனால் அணைக்கு வரும் 304 கன அடி நீர் முழுவதும் திறக்கப்படுகிறது. பெரியாறு 2.4, தேக்கடி 7, கூடலூர் 4.8, சண்முகா நதி அணை 6.3, உத்தமபாளையம் 8.2, வீரபாண்டி 1.1, வைகை அணை 12.8, மஞ்சளாறு 42, சோத்துப்பாறை 1 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.