சின்ன பாப்பா உன்னைப் பார்த்துச்
சிரிக்கும் சோலைப் பூவும்!
வண்ணச் சோலை புன்னை மீது
மகிழ்ந்தே குயிலும் கூவும்.
பொன்னைப் போல மின்னும் பூவில்
பொழியும் இன்பத் தேனும்!
மின்னும் பூவைத் தன்னின் கண்ணால்
விரும்பிப் பார்க்கும் வானும்
அங்கும் இங்கும் எங்கும் திரியும்
அழகுக் கதிரோ தங்கம்!
தங்க மேனித் தங்கும் ஒளியால்
தரையில் இன்பம் தங்கும் !
மஞ்சள் நிலவு விஞ்சும் அழகு
மயக்கும் மலரை விடவும்!
கொஞ்சும் குழந்தை நெஞ்சம் போலக்
குழைத்துத் தேனைத் தடவும்
மயிலின் தோகை ஒயிலைக் காணும்
மனமும் அதையே நாடும்!
மயிலும் ஆடக் குயிலும் பாட
மனமும் ஆடிப்பாடும்!
எங்கும் அழகு தங்கும் இயற்கை
இன்பம் ஊட்டும் அமுதம்!
மங்கா அழகு பொங்கும்
இன்பம்மனத்திற் கேற்ப அமையும்!