tamilnadu

img

ஊரடங்கு முழுமையாக நீங்கும் வரை மதுக்கடைகளை திறக்கக் கூடாது... உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

மதுரை:
தமிழகத்தில் கொரோனா பரவலையொட்டி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் மே 7-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் திறக்கப்பட்டது.இதையடுத்து மதுக்கடைகளை மூடவேண்டுமென வலியுறுத்தி இந்திய ஜனநாயகவாலிபர் சங்கத்தின் தெற்குவாசல் பகுதிக் குழுத் தலைவர் ஏ.போணி பாஸ் மே 5-ஆம்தேதி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இதேபோல் மக்கள் நீதிமய்யத்தைச் சேர்ந்த ஒருவரும் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

மதுரைக் கிளையில் ஏ.போணிபாஸ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கள் பி.என்.பிரகாஷ், டி.புகழேந்தி அமர்வு விசாரித்து மனுக்கடைகளை திறக்க தடை விதித்தது மே 11-ஆம் தேதி உத்தரவிட்டது. போணி பாஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆஜரானார்.மதுக்கடைகளை திறப்பது குறித்து தமிழக அரசு சென்னை உயர்நீதி மன்றத்தை  (முழு அமர்வு) அணுகியுள்ளது. இந்த மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வருகிறது.இதற்கிடையில் மதுக்கடைகளை திறப்பது குறித்து தங்களை கேட்காமல் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என ஏ.போணிபாஸ் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

;