கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் வழக்கம் போல 1986 மே ஒன்றாம் தேதி மே தின விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. மண்டைக்காடு கலவர பின்னணியில் இயல்பாக வகுப்புவாத ஆர் எஸ் எஸ் எதிர்ப்பே அன்றைய மே தின முழக்கமாக இருந்தது. மஞ்சாலுமூட்டில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்திற்கு, வழியெங்கும் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. குறிப்பாக மலையாள மொழி பேசும் மக்கள் பேரெழுச்சியுடன் பங்கேற்றனர். இதனை சகித்துக் கொள்ள முடியாத ஆர்எஸ்எஸ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக தாக்குதல் நடத்த திட்டமிட்டது. இதற்காக கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து பயிற்சி பெற்ற நபர்களை மஞ்சாலுமூடு பகுதிக்கு வரவழைத்து சில இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து மத வெறியூட்டி கொலைக் கத்தியுடன் களமிறக்கினர். அவர்களது இலக்கு தோழர்கள் நடராஜன், கிருஷ்ணன் குட்டி போன்ற மூத்த தோழர்கள். ஆனால். மே 10ஆம் தேதி அவர்களது கொலை வெறித் தாக்குதலில் சிக்கி தோழர் பாபு இரையானார். மரணத்துடன் போராடிய அவருக்கு கொலைக் களத்தில் துணிச்சலாக இறங்கி உயிர் நீ த்தவர் தோழர் செல்லையன். . மக்கள் ஒற்றுமை காக்க களப்பலியான தோழர்கள் பாபு, செல்லையன் நினைவுகளைப் போற்றுவோம். மதவெறி மாய்ப்போம். - சி.சசிகுமார், சிபிஎம் வட்டாரச் செயலாளர், அருமனை.