tamilnadu

img

இனிமேல் எந்தச் சூழலிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது

கிருஷ்ணகிரி, செப். 28 - தேசிய ஜனநாயக கூட்டணி யிலிருந்து விலகிக் கொள்வதாக, கடந்த செப்டம்பர் 25 அன்று, அதிமுக அதிரடியாக அறிவித்தது. கூட்டணி முறிவை அதிமுக - பாஜக ஆகிய இரண்டு கட்சித் தொண்டர்களுமே பட்டாசு வெடித்துக் கொண்டாடினா லும், அதிமுக-வின் விலகல் அரசியல்  வல்லுநர்கள் மத்தியில் சந்தேகத்திற்கு உரியதாகவே இருந்து வருகிறது. ஏனெனில், 9 ஆண்டுகால பாஜக ஆட்சி மீதும், அது அமல்படுத்திய மக்கள் விரோதக் கொள்கைகள் மீதும், பாஜக தேசியத் தலைமை மீதும்  எந்த விமர்சனமும் வைக்காத பாஜக,  அண்ணாமலை என்ற ஒற்றை நபரை  மட்டுமே முன்னிறுத்தி, கூட்டணி முறிவை வெளியிட்டு இருந்ததால், பாஜக தேசியத் தலைமை தொடர்பு கொண்டு சமாதானப்படுத்தும் பட்சத்தில், மீண்டும் பாஜக கூட்டணி யில் அதிமுக இணையும் என்ற யூகங்களை அது ஏற்படுத்தியது. பாஜக மூத்த தலைவரான எச். ராஜா, கூட்டணியிலுள்ள புதிய தமிழ கம் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட் டோரும், அதிமுக-வுடன் பாஜக பேச்சு  நடத்தி வருவதாகவும், அதிமுக மீண்டும் பாஜக-வோடு இணையும் என்றும் நம்பிக்கையுடன் கூறி வந்தனர். 25-ஆம் தேதி அறிவிப்போடு சரி, அதன் பின்னர் அதிமுக தலை மை பாஜகவுக்கு எதிராக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பதையும் அதற்கு அவர்கள் ஒரு காரணமாக்கினர். இந்நிலையில்தான் கிருஷ்ணகிரி யில் வியாழனன்று காலை செய்தி யாளர்களைச் சந்தித்த அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி, “2024 நாடாளுமன்றத் தேர்தல், 2026 சட்டமன்றத் தேர்தல் என  இனி எந்தச் சூழ்நிலையிலும் பாஜக-வோடு அதிமுக கூட்டணி சேராது” என்று திட்டவட்டமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.  அதில், அவர் மேலும் கூறியிருப்பதாவது: “அதிமுக தலைவர்கள் பற்றி பாஜக-வினர் கடுமையான விமர்ச னம் செய்தார்கள். தொடர்ந்து விமர்ச னம் செய்ததால் பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொண்டோம். உண்மைக்கு மாறான விமர்சனங் களை அண்ணாமலை வைத்ததால் தொண்டர்கள் கோபமடைந்தனர். 2 கோடி தொண்டர்களின் உணர்வுகளை மாவட்டச் செயலாளர்கள் எடுத்து ரைத்தனர். பாஜக உடனான கூட்டணி யை முறிப்பது என்பது 2 கோடி தொண்ட ர்களின் உணர்வு. அதனை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொண்டார். ஆனால், தேர்தல் வந்தால் மீண்டும் பாஜக-வுடன் அதிமுக கூட்டணி சேரும் என்று மு.க. ஸ்டாலின், உதயநிதி கூறி  வருகின்றனர். இது ஒருபோதும் நடக் காது. எந்த சூழ்நிலையிலும் பாஜக வுடன் அதிமுக கூட்டணி சேராது. 2024 மக்களவைத் தேர்தல் மட்டுமின்றி, 2026 சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி இருக்காது. ஒரு கட்சியின் மாநிலத் தலைவரை மாற்ற வேண்டும் என்று  நாங்கள் கூறினால் அது சிறுபிள்ளைத் தனமாகவே இருக்கும்.  அண்ணா மலையை மாற்றுமாறு கோரிக்கை வைக்கவில்லை. முதிர்ந்த ஒரு அர சியல் கட்சி எந்த நிலையிலும் அடுத்த கட்சியின் தலைவரை மாற்ற வேண்டும் என கேட்காது. நாகரிக மான தலைவர்கள் எங்களிடம் உள்ளனர்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.