tamilnadu

img

நுகர்வோருக்கு பாதுகாப்பளிக்கும் கேரள அரசின் கம்ஸ்யூமர்பெட்

நுகர்வோருக்கு பாதுகாப்பளிக்கும்  கேரள அரசின் கம்ஸ்யூமர்பெட்

கேரள மாநில கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பே கம்ஸ்யூமர்பெட் (ConsumerFed) என்று அழைக்கப்படுகிறது. இது கூட்டுறவு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு முன்னணி சில்லறை சந்தைப்படுத்தல் முயற்சியாகும், இது கேரள அரசின் திருவிதாங்கூர் கொச்சி கூட்டுறவு சங்கங்கள் சட்டம், 1951 இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.  பொதுமக்களுக்கு மலிவு விலையில் நுகர் பொருட்கள் மற்றும் மருந்துகளை விநியோகிப்பதும், அவர்களின் வாங்கும் உரிமைகளை சுரண்டலில் இருந்து பாதுகாப்பதும் கம்ஸ்யூமர்பெட்-இன் முதன்மையான குறிக்கோள் ஆகும். நிறுவனத்தின் நோக்கத்தை நிறை வேற்ற, 2239 க்கும் மேற்பட்ட அர்ப்பணிப்புள்ள ஊழியர்களின் உதவியுடன் மாநிலத்தில் நானூறுக்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களைத் திறந்து மொத்த விற்பனையை மேற்கொண்டு வருகிறது கன்ஸ்யூமர்பெட்.