மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் கமல்ஹாசன் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!
சென்னை, மே 28- தமிழகத்தில் ஜூலை 24ந்தேதியுடன் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் 19 அன்று தேர்தல் நடைபெறும் என, மே 26-ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், மாநிலங்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி சார்பில் 4 பேரை தேர்ந்தெடு க்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ள நிலையில், திமுக வேட்பாளர் பட்டி யல் அதிகாரப்பூர்வமாக வெளி யிடப்பட்டுள்ளது. இதன்படி வழக்கறிஞர் பி. வில்ச னுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது. அவர் தவிர, எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகி யோர் திமுக வேட்பாளர்களாக அறி விக்கப்பட்டுள்ளனர். கடந்த மக்களவைத் தேர்தலின் போது ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப் படையில், மக்கள் நீதி மய்யத்திற்கு ஓர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவார் என்று மநீம நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.