tamilnadu

img

ஈரோட்டில் கே.பாலகிருஷ்ணன் பிரச்சாரம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் ஈவிகேஎஸ்.இளங்கோவனை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த பிரச்சாரத்தில், தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளானோர் பங்கேற்றனர்.