சென்னை, ஆக. 19 - தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினின் இணைச் செயலாளராக ஜி. லட்சுமிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த அவர் இந்தப் புதிய பதவியில் பணியமர்த்தப்படுவதால் தூத்துக்குடி ஆட்சியராக- தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றி வந்த ஐஏஎஸ் அதிகாரி இளம் பகவத் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை புதிய தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட நா. முருகானந்தம் வெளியிட்டுள்ளார்.