tamilnadu

img

வட்டிக்கு வட்டி போடுவது நியாயமற்றது - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

பணம் கட்ட முடியாதவர்களுக்கு வட்டிக்கு வட்டி போடுவது நியாயமற்றது என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பெரம்பலூர் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவர் வீடு மற்றும் விவசாய கடனாக 65 லட்சம் ரூபாய் திருச்சியிலுள்ள தனியார் வங்கியிடம் கடன் பெற்று நீண்ட நாட்களாக செலுத்தி வந்தார். தற்போது இந்த கொரோனா காலத்தில் வேலை சரியாக இல்லாததால் கடனை செலுத்த முடியாமல் இருந்தது. இந்நிலையில், அந்த வங்கி தனியார் நிறுவனம் மற்றும் குண்டர்கள் மூலம் கடன் தொகை கட்ட சொல்லி மிரட்டியதாகவும், விவசாய நிலங்களை அபகரிக்கும் நோக்கில் வங்கி செயல்படுவதாகவும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  தனியார் நிறுவனம் மற்றும் குண்டர்கள் மூலம் கடனை வசூலிப்பது எந்த விதிகளின் அடிப்படையில் வங்கிகள் தருகின்றன? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், 1000 கோடி ரூபாய் கடன் வாங்கியவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர். ஆனால் சிறு கடன்கள் வாங்கிய ஏழைகள் துன்புறுத்தப்படுகிறார்கள். பணம் கட்ட முடியாதவர்களுக்கு வட்டிக்கு வட்டி போடுவது நியாயமற்றது. என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மேலும் சம்பந்தப்பட்ட வங்கியின் மேலாளர் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு  இந்த வழக்கின் விசாரணை டிசம்பர் 1ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

;