கிரிக்கெட் உலகின் முதன்மையான உள்ளூர் டி-20 தொடரான இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) தொடரின் 18ஆவது சீசன் சனிக்கிழமை அன்று தொடங்குகின்றன.
மே மாதம் 25ஆம் தேதி நடைபெறும் இந்த ஐபிஎல் தொடரில் மொத்தம் 10 அணிகள் களம்காண்கின்றன. 74 போட்டிகள் 13 மைதானங்களில் நடைபெறுகின்றன. குவாலிபையர், எலிமினேட்டர் ஆட்டங்கள் ஹைதராபாத் (தெலுங்கானா) மைதானத்திலும், இறுதி ஆட்டம் கொல்கத்தாவிலும் (மேற்கு வங்கம்) நடைபெறுகின்றன. இந்நிலையில், 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா - பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டம் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் சனிக்கிழமை அன்று 7:30 மணிக்கு நடைபெறுகிறது.
10 அணிகளும்... கேப்டன்களும்... 1
. சென்னை சூப்பர் கிங்ஸ் - ருதுராஜ் கெய்க்வாட் (இந்தியா)
2. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ரஜாத் படிதார் (இந்தியா)
3. சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் - பேட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா)
4. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அஜிங்கியா ரஹானே (இந்தியா)
5. மும்பை இந்தியன்ஸ் - ஹர்திக் பாண்டியா (இந்தியா)
6. ராஜஸ்தான் ராயல்ஸ் - சஞ்சு சாம்சன் (இந்தியா)
7. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ரிஷப் பண்ட் (இந்தியா)
8. குஜராத் டைட்டன்ஸ் - சப்மன் கில் (இந்தியா)
9. பஞ்சாப் கிங்ஸ் - ஸ்ரேயாஸ் ஐயர் (இந்தியா)
10. தில்லி கேபிடல்ஸ் - அக்சர் படேல் (இந்தியா)
வழிவிடுமா மழை?
வங்காள விரிகுடா கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மையம் காரணமாக மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் மார்ச் 22 வரை இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று வீசும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். இதனால் ஐபிஎல் போட்டியின் தொடக்க ஆட்டம் மழையால் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல தொடக்க விழாவுக்கு பிரம்மாண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கு மழை வழிவிடுமா என்ற அச்சமும் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
மைதானங்களும்... (மாநிலங்களும் - ஹோம் கிரவுண்ட்ஸ்களும்)
1. எம்.ஏ.சிதம்பரம் - சென்னை (தமிழ்நாடு - சென்னை)
2. எம். சின்னசாமி - பெங்களூரு (கர்நாடகா - பெங்களூரு)
3. ராஜீவ் காந்தி - ஹைதராபாத் (தெலுங்கானா - ஹைதராபாத்)
4. ஈடன் கார்டன் - கொல்கத்தா (மேற்கு வங்கம் - கொல்கத்தா)
5. ஜவாய் மான் சிங் - ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்)
6. வான்கடே - மும்பை (மகாராஷ்டிரா - மும்பை)
7. ஜெட்லீ - புதுதில்லி (தில்லி)
8. எம்.ஒய்.சிங் - முல்லன்பூர் (பஞ்சாப்)
9. எகானா - லக்னோ (உத்தரப்பிரதேசம் - லக்னோ)
10. என்.எம் மைதானம் - அகமதாபாத் - (குஜராத்) கூடுதல் மைதானங்கள்
11. எச்.சி.ஏ மைதானம் - தரம்சாலா (இமாச்சலப்பிரதேசம் - பஞ்சாப் அணியின் கூடுதல் ஹோம்)
12. பார்ஸபரா - கவுகாத்தி (அசாம் - ராஜஸ்தான் அணியின் கூடுதல் ஹோம்)
13. ஒய்எஸ்ஆர் மைதானம் - விசாகப்பட்டினம் (ஆந்திரா - தில்லி அணியின் கூடுதல் ஹோம்)