tamilnadu

img

கொரோனா சிகிச்சையை தீவிரப்படுத்துக! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

மதுரை, ஜூலை 1- மதுரையில் கொரோனா சிகிச்சையை விரைவுபடுத்த வேண் டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன் விடுத்துள்ள அறிக்கை:- கொரோனா நோய்தொற்று பரவத் தொடங்கிய நாளிலிருந்து, ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளி லிருந்து மாநிலக் குழு உறுப்பினரும் மதுரை மக்களவை உறுப்பினரு மான சு.வெங்கடேசன் மூலமாக தொற்று பரவாமல் தடுக்க அரசு, மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டிய பிரச்சனைகள் குறித்து வற்புறுத்தி வருகிறார். கொரோனா பரிசோதனை தினசரி 3,000 செய்யவேண்டுமென்று வலியுறுத்தப்பட்டது. தற்போது மதுரை முழுவதும் தொற்று வேக மாகப் பரவி வருகிறது. அரசு ராஜாஜி மருத்துவமனை, ஒத்தக்கடை விவ சாயக் கல்லூரி, தியாகராஜர் கல்லூரி வளாகம் ஆகியவற்றில் நோயாளிகள் நிரம்பி வருகின்றனர்.

இன்னும் சில இடங்களை தயார் படுத்த வேண்டிய உள்ளது மது ரையில் உள்ள நான்கு பெரிய தனி யார் மருத்துவமனையிலும் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆகவே தமிழக அரசும், மாவட்ட ஆட்சியர் நோயாளிகள் எண்ணிக்கை அதிக ரிப்பிற்கு ஏற்ப தகுந்த முன்னேற் பாடுகள் செய்ய வேண்டும். ஒத்தக்கடை வேளாண்மை கல்லூரியில் உள்ள நோயாளி களுக்கு ஜூன் 30-ஆம் தேதி காலை வழங்வேண்டிய மாத்திரைகள் பகல் 12 மணி வரை வழங்கப்பட வில்லை. கொரோனாவோடு வேறு சில நோய் உள்ளவர்கள் நிறைய பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இருதய பாதிப்புவுள்ளவர்களுக்கு அதற்குரிய மாத்திரைகள் வழங் கப்படுவதில்லை. வெளியில் வாங்கச் செல்லும் நிலையை தவிர்க்க வேண்டும். அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் உள்ள கழிப்ப றைகள் சுத்தம் செய்வதில் உள்ள குறைபாடுகளை போக்க வேண் டும். மதிய உணவு தரமாக காலதாம தமின்றி வழங்க வேண்டும்.

அதே போல் ஆரம்ப சுகாதார மையங்க ளில் நிலவும் மருந்து மாத்திரை தட்டுப்பாடுகளை தீர்க்கவேண்டும். சென்ற ஜூன் மாதம் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு பேருந்துகள் இயக்கப்பட்டது 50 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவித்து ஆனால் 30 தவீத பேருந்துகளே இயக்கப்பட்டன. பயணம் செய்பவர்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டன. ஒவ்வொரு பயண நேரம் முடிந்த பின் பேருந்துகள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண் டும் என அரசு அறிவுறுத்தியது முறையாக அவை கடைபிடிக்க வில்லை அரசு, தனியார் பேருந்து கள் இதை மீறியுள்ளன. நகர் பேருந்துகள் குறைவாக இயக்கப் பட்டதால் ஊர்களுக்கு செல்லும் மக்கள் நிர்ணயிக்கப்பட்ட அள வுக்கு கூடுதலான பயணித்தது கொரோனா பரவலுக்கு ஒரு கார ணமாக அமைந்துள்ளது. முடிதிருத்தும் தொழிலாளர் களுக்கு ரூபாய் 2 ஆயிரம் நிவா ரணம் வழங்கப்படும் எஙனற அர சாணை வெளிவந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. மாவட்ட நிர்வாகம், மண்டல அளவிலான அலுவலக அதிகாரிகள் தங்களுக்கு இந்த அரசாணை என்னவென்றே தெரி யாது என கூறுகின்றனர்.

அறிவித்த படி உடனடியாக முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மதுரையில் உள்ள ஏராளமான தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்கப்பட மாட்டாது என அறிவிப்பு வெளி யிட்டுள்ளன. பல தனியார் மருத்துவ மனைகள் பூட்டிக் கிடக்கிறது. மாநகராட்சி பகுதி முழுவதும் காய்ச்சல் ஏராளமானோருக்கு வந் துள்ளது மூன்று நாளில் இருந்து ஐந்து நாட்கள் வரை நீடிக்கின்றது. இது சாதாரண காய்ச்சலா? கொரோனா பாதிப்பா? என தெரியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். தன்னார்வலர்கள் வீட்டிலுள்ள மொத்தம் எத்தனை நபர்கள் என்று கேட்டு நோய் எதுவும் இருக்கிறதா என விசாரித்து விவரம் சேக ரித்துச் செல்கின்றனர். சோதனை கள் செய்வதில்லை கொரோனா மதுரையில் தீவிரமடைந்துவரு கிறது. மாவட்ட நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரப் படுத்த வேண்டும்.

;