திருப்பூர், பிப்.16- திருப்பூர் மாவட்டத்தில் தொழி லாளர் வாழ்வாதாரத்தைப் பாது காக்க குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்கவும், 1979ஆம் ஆண்டு புலம் பெயர்ந்த தொழிலா ளர் சட்டத்தை முறையாக அமல் படுத்தவும் மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய திருப்பூர் மாவட்ட தொழில் பாதுகாப்பு, தொழிலாளர் வாழ்வு ரிமை மாநாடு வலியுறுத்தியது. செவ்வாயன்று நடைபெற்ற இம்மாநாட்டில், தொழிலாளர் வாழ் வுரிமையை பாதுகாக்க கோரும் தீர்மானத்தை சிஐடியு பனியன் பொதுத் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.சம்பத் முன்மொழிந்தார். தமிழ்நாடு விசைத்தறித் தொழிலாளர் சம்மேள னத் தலைவர் பி.முத்துச்சாமி வழி மொழிந்தார். இத்தீர்மானத்தில் கூறியிருப்ப தாவது: திருப்பூர் மாவட்டத்தில் பனி யன், விசைத்தறி மற்றும் முறைசாராத் தொழில்களில் சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். தினசரி உயரும் விலைவாசி, வீட்டு வாடகை, கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலையில் உள்ள னர். ஆகவே இரவு, பகல் பாராமல் குடும்பமே வேலை செய்தால்தான் உயிர் வாழ முடியும் என்ற சூழல் நிலவுகிறது. எனவே இத்தகைய நிலைமைகளில் இருந்து விடுபடக் கூடிய முறையில் அனைத்து பிரிவு தொழிலாளர்களுக்கும், இந்திய தொழிலாளர் மாநாட்டில் பரிந்து ரைக்கப்பட்ட அடிப்படையிலும், 1992 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படை யிலும் கணக்கிட்டு, 8 மணி நேர வேலைக்கு குறைந்தபட்ச மாத ஊதியமாக 26 ஆயிரம் ரூபாய் என அரசு நிர்ணயம் செய்து தொழிலா ளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பூர் மாவட்டத்தில் பல் வேறு தொழில்களில் வேலை செய் யும் பல ஆயிரக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்களை வரை முறைப்படுத்தவும் அவர்களுக்கும் சட்ட, சமூக பாதுகாப்பு உறுதிப் படுத்தவும், புலம் பெயர்ந்த தொழி லாளர் சட்டம் 1979 ஐ மாநில அரசும், தொழிலாளர் துறையும் முறையாக அமல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். திருப்பூர் மாவட்டத்தில் மக்கள் நெருக்கடி அதிகரித்து, குடியிருக்க வீடுகள் என்பது மிகப் பெரும் பிரச்ச னையாக மாறியுள்ளது. தனது வரு மானத்தில் சுமார் 30 சதவீதம் வீட்டு வாடகையாக செலுத்த வேண்டி யுள்ளது. தொழிற்பேட்டைகள் ஏற் படுத்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து சிறப்பு திட்டங்கள் தீட்டும் ஒன்றிய, மாநில அரசுகள் திருப்பூர் மாவட்டத்தில் தொழிலாளர்களின் குடியிருப்பு பிரச்சனைக்கு தீர்வு காணக்கூடிய முறையில் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து வீடுகள் கட்டித் தர வேண்டும்.
விசைத்தறி தொழிலாளர் களுக்கு ஏற்கனவே உள்ள காப்பீட்டு திட்டத்தை மீண்டும் முறையாக அம லாக்கிட வேண்டும். மேலும் தொழிற்சாலை சட்டம், இஎஸ்ஐ, பிஎஃப் சட்டம், ஒப்பந்த தொழிலாளர் சட்டம், முறைசாராத் தொழிலாளர் பாதுகாப்பு சட்டம் மற் றும் தொழிற்சங்கங்களுடன் செய்து கொண்ட முத்தரப்பு ஒப்பந்தம் ஆகி யவற்றை தமிழ்நாடு அரசும் தொழி லாளர் துறையும் முறையாக அம லாக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது உள்ளாட்சி துறை களில் அவுட்சோர்சிங் முறையை புகுத்தி தனியார்மய கொள்ளைக்கு வழிவகுத்து, மாநகராட்சி, நக ராட்சி, பேரூராட்சிகளில் நிர்வாகம் மற்றும் தூய்மைப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்யும் பல்லாயிரக்கணக்கான ஊழியர் களின் எதிர்காலத்தையே கேள்விக் குறியாக்கும் அரசாணைகள் 152, 139 மற்றும் அரசாணை 10 ஆகிய வற்றை ரத்து செய்ய வேண்டும். திருப்பூரில் தொழிலாளர்கள் திறனை மேம்படுத்த பல்தொழில் நுட்ப கல்லூரி மற்றும் தொழில் பயிற்சி மையங்களை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என மாநாட்டில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.