புதுதில்லி, டிச.15- சட்டமன்றத் தேர்தல்கள் முடிவடைந்து விட்டதால், பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் இனி நாளொருமேனியும் பொழு தொரு வண்ணமுமாக உயரக்கூடும் என்பது நிச்சயம் என்று மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ஏ.எம்.ஆரிப் பேசினார். நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மக்களவையில் ஏ.எம். ஆரிப் பேசியதாவது: துணை மானியக் கோரிக்கைகள் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்துக் களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் விமர்சனங்களை அமைச்சர் ‘பர்சனலாக’ எடுத் துக்கொள்ள வேண்டாம் என்று முதலிலேயே தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அதிர்ஷ்டவசமாகவோ, அல்லது துரதிர்ஷ்ட வசமாகவோ அவர் இப்போது அவையில் இல்லை. நாங்கள் இந்த நாட்டின் சாமானி யர்களுக்காக பிரச்சனைகளை எழுப்பிக் கொண்டிருக்கிறோம். இது எங்கள் கடமை
பொதுக்கணக்குக் குழு அதிர்ச்சி
2019-20ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட தொகையைவிட மிகுதியாக செலவு செய்யப் பட்டிருப்பதாக, பொதுக் கணக்குக் குழுவின் சமீபத்திய அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், பொதுக் கணக்குக் குழு, ஒன்றிய அரசாங்கத்தின் அமைச்சகங்களில் இரு அமைச்சகங்கள் அவற்றுக்கு ஒதுக்கிய தொகையைவிட மிகையாக செலவு செய்தி ருப்பதாகக் கண்டிருக்கிறது. இதில் ஒன்று நிதி அமைச்சகமாகும். அதிலும் குறிப்பாக நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வருவாய்த் துறை, சுமார் 31,934 கோடி ரூபாய் தொகை யை ஒதுக்கப்பட்டதைவிட அதிகமாகச் செலவு செய்திருப்பது கண்டு, பொதுக் கணக்குக் குழு தன் அதிர்ச்சியைத் தெரிவித்திருக்கிறது. இது சென்ற ஆண்டு 2020 மார்ச் மாதத்தில் அமைச்ச கம் துணை மானியத் தொகையில் சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் எடுத்துக்கொண்டதைக் காட்டிலும் அதிகமாகும் என்பது இங்கே கவ னிக்கத்தக்கதாகும். பட்ஜெட்டில் ஒதுக்கப் பட்ட தொகையைக் காட்டிலும் அதிகமான அள விற்கு நிதியமைச்சகமே செலவு செய்தால், இங்கே இப்படி துணை மானியக் கோரிக்கை களை தாக்கல் செய்வதன் பொருள்தான் என்ன? இதற்காக எங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டும்?
காலத்தே சரி செய்யாததால்...
இது தொடர்பாக பொதுக் கணக்குக் குழு வின் கருத்துக்களை மேற்கோள் காட்ட விரும்பு கிறேன். ஏனெனில் அது நாட்டின் பொருளா தாரத்தின் மீது அரசாங்கம் ஒட்டுமொத்தமாக நிதி மேலாண்மை செய்வதற்கு இது அவசி யம் என்று நான் கருதுகிறேன். அமைச்ச கங்களின் சார்பில் அளிக்கப்பட்டுள்ள கார ணங்களையும் மேற்கோள் காட்ட விரும்பு கிறேன். அவை கூறியிருப்பதாவது: “கடந்த காலங்களைப் போலவே, செலவினம் குறித்து தொடர்ந்து கவனிக்காததன் காரணமாக, அவ் வாறு கவனித்து, காலத்தே சரி செய்யாத தன் காரணமாக, கூடுதல் நிதித் தேவையை முறையாக எதிர்பார்ப்பதில் தோல்வியடைந்த தால், இவ்வாறு கூடுதல் செலவினம் ஏற்பட்டி ருக்கிறது.” 2020-21இல் கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தின்போது நிதியமைச்சர், 20 லட்சம் கோடி ரூபாய் ஊக்குவிப்பு மற்றும் நிவா ரணத் தொகுப்பு அறிவித்தார். இதன் விளைவு என்ன? இவர்கள் அளித்த ஊக்குவிப்பு நிவா ரணம் என்பது சாமானியர்களைப் பொறுத்த வரையிலும் பொய் வாக்குறுதிகளையும், வங்கிக் கடன்கள் தொடர்பாக கால நீட்டிப்பை யும் தவிர வேறெதுவும் இருக்கிறதா என்று எவருக்கும் தெரியாது. சாமானியர்களுக்குக் கிடைத்ததெல்லாம் ஒவ்வொரு மாதமும் ஐந்து கிலோ கிராம் அரிசியைத் தவிர வேறெது வும் கிடையாது. அவர்கள் அளித்த அரிசியைச் சமைப்பதற்கு, சமையல் எரிவாயுவிற்கு அளித்துவந்த மானியம் கடந்த இரண்டு ஆண்டு களாக வெட்டப்பட்டுவிட்டதால், அவர்கள் அதிக அளவில் செலவு செய்ய வேண்டி யிருக்கிறது.
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுகள்
அதிர்ஷ்டவசமாக, குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச சட்டமன்றங்களின் தேர்தல் காரணமாக பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் நாளும் உயர்வதற்குத் திடீரென்று ‘சடன் பிரேக்’ போடப்பட்டு இதுவரை யிலும் நிறுத்தப்பட்டிருந்தது. இனி இன்றோ அல்லது நாளையிலிருந்தோ இவற்றின் விலை நிச்சயமாக ராக்கெட் வேகத்தில் விண்ணில் பறந்திடும். வங்கிகளில் வாங்கி யிருந்த கடன்கள் திருப்பிச் செலுத்து வதற்கான காலநீட்டிப்பு என்பதும் வெறும் கண்துடைப்பே என்பது இப்போது தெள்ளத் தெளிவாகி இருக்கிறது. இதனால் கடன் வட்டிதான் அதிகரிக்க இது உதவியிருக்கிறதே தவிர வேறல்ல. நாட்டில் ஏழை மக்கள் வாங் கிய கடனில் ஒரு பைசா கூட ரத்து செய்யப்பட வில்லை. அதேபோன்று மாணவர்கள் வாங்கிய கல்விக் கடனிலும் எவ்வித சலுகையும் காட்டப்படவில்லை.
நாட்டுப்பற்று எங்கே சென்றது?
அரசாங்கம் கொண்டுவந்த ஆத்ம நிர்பார் பாரத் ஊக்குவிப்பு என்பது நடைமுறையில் அதானிநிர்பார் பாரத் ஊக்குவிப்பு தொகை யாகவே மாறியிருக்கிறது. நாட்டின் சொத்துக் கள் அனைத்தும் அதானி வசம் ஒப்படைக் கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அநேகமாக அனைத்து விமான நிலையங்களும் அதானி யிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. துறை முகங்களும் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. நாட்டின் ஒரேயொரு விமான நிறுவனமாக இருந்த ஏர் இந்தியா விற்கப்பட்டபின், பிரதமர் இரு விமானங்களைத் தன் சொந்த உபயோ கத்திற்கு என்று பெற்றிருப்பது வெட்கமாக இல்லையா? ஏர் இந்தியா விற்கப்படும் சமயத்தில் இவர்களின் நாட்டுப்பற்று எங்கே பறந்து சென்றது? ஏர் இந்தியா, விமான நிலை யங்கள், துறைமுகங்கள் தாரை வார்க்கப் பட்டபின் இப்போது ரயில்வேயை விற்கத் தொடங்கி இருக்கிறார்கள். ஏற்கனவே இதற் கான வேலைகள் கொல்லைப்புற வழி யாகத் தொடங்கிவிட்டது. அவற்றை யார் பெறப்போகிறார்கள் என்பதை ஓரிரு ஆண்டு கள் நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
வயிற்றிலடிக்கலாமா?
அதே சமயத்தில் சாமானியர்களின் நிலை? ஐந்து கிலோ மீட்டர் பயணம் செய்வதற்குக் கூட அவர்கள் 30 ரூபாய் செலவழிக்க வேண்டும். ஏனெனில் கோவிட் 19ஐக் காட்டி, ரயில்வே அனைத்து பாசஞ்சர் ரயில்களையும் எக்ஸ் பிரஸ் ரயில்களாக மாற்றி இருக்கின்றன. மூத் தோர்களுக்கான சலுகைகள் கைவிடப்பட்டி ருக்கிறது. வேறு எந்தவொரு ஜனநாயக நாடா வது, கோவிட்-19ஐக் காரணம் காட்டி மக்க ளின் வயிற்றில் இப்படி அடிப்பதாகச் சொல்ல முடியுமா? கோவிட்-19 பெருந்தொற்றுக்குப்பின் மத்தியப் பல்கலைக் கழகங்கள் பல்வேறு கல்லூரிகளில் சிறுபான்மையினருக்கு அளித்து வந்த கல்வி உதவிப்பணத்தை ரத்து செய்து விட்டன. மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்புச் சட்டத்தின்கீழும் போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. மத்திய வரி மற்றும் ஜிஎஸ்டி-வரியிலிருந்து மாநில அரசுகளுக்குத் தரப்படவேண்டிய பங்கை ஒன்றிய அரசு தரா மல் மறுத்து வருகிறது. மாநிலங்கள் ஒன்றிய அரசின் தயவில் வாழக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. இவ்வாறு எம்.ஏ.ஆரிப் பேசினார். (ந.நி.)