tamilnadu

img

மருத்துவக்காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்துக! போக்குவரத்து ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை:
போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 2015நவம்பர் முதல் வழங்க வேண்டிய 59 மாத டி.ஏ. உயர்வை நிலுவையுடன் வழங்கவேண்டும். 2019-ஆம் ஆண்டு ஏப்ரல்மாதம் முதல் பணி ஓய்வு பெற்றவர் களுக்கு பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். 2009-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பென்சன் சீராய்வுக் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுபோக்குவரத்து  ஓய்வு பெற்றோர் நலஅமைப்பு சார்பில் மதுரையில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செவ்வாயன்று நடைபெற்றது.

மதுரை புறவழிச்சாலை தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் மாநிலத் துணைச் செயலாளர் ஏ.முருகேசன் மதுரை மாவட்டப் பொருளாளர் கே.சுப்பிரமணியன், மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ஆர். தேவராஜ்,  அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் மாநில சம்மேளன (சிஐடியு) துணைத்தலைவர் வி.பிச்சை,  பி. செல்வராஜ், எஸ்.ஆறுமுகம்,  சவுரிதாஸ் உட்பட  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விருதுநகர்
விருதுநகர் பணிமனை முன்பு நடைபெற்ற போராட்டத்தில் பாண்டியராஜ், போஸ், மண்டல தலைவர் யு.பிச்சை,உதவிச் செயலாளர் ஜி.வேலுச்சாமி, மாநிலச் செயலாளர் எம்.வெள்ளைத் துரை உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.திருவில்லிபுத்தூரில் ஆர்ப்பாட்டத் திற்கு  தங்கமாரி தலைமை வகித்தார்.  மாவட்டச் செயலாளர் தங்கப்பழம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகஊழியர் சம்மேளன உறுப்பினர் முனீஸ்வரன்,  கிருஷ்ணமூர்த்தி,  நாகப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

இராமநாதபுரம்
இராமநாதபுரம் பணிமனை முன்பு நடைபெற்ற போராட்டத்தில், மாநில நிர்வாகி ஜே.பவுல்ராஜ், சிஐடியு மாவட்டநிர்வாகிகள் எம்.சிவாஜி, எம். அய்யாத்துரை மற்றும் பாஸ்கரன், மணிக் கண்ணுராமதாஸ், ராஜாமணி உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர்.வத்தலகுண்டு கிளையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  சிஐடியு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் குணசீலன், பாண்டி, முருகவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

;