tamilnadu

img

நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் பருவகால தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்திடுக... சிஐடியு வலியுறுத்தல் ...

மதுரை:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும்பருவகால தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது தொழிலாளர் சங்கம் (சிஐடியு) வலியுறுத்தியுள்ளது.

இச்சங்கத்தின் மாநிலச் செயற்குழு கூட்டம் மதுரையில் மாநிலத் தலைவர் வி.குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் ஆர்.புவனேஸ்வரன் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் அனைத்துமண்டலங்களிலும், எடையாளர்கள்,பட்டியல் எழுத்தர்கள் பணியிடங் கள் கடந்த 2 வருடங்களாக நிரப்பப்படாமல் உள்ளது. இதனால், அங்காடிகளில் பணிபுரியும் ஊழியர்கள் எண்ணிக்கை குறைவாகவும், பணிபுரியும் ஊழியர்களில் பணிச்சுமைஅதிகரித்தும் உள்ளது. காலிப்பணி யிடங்களை ஒப்பந்தத்தின் மூலமாகதகுதி வாய்ந்த பருவ கால பணியாளர்கள் மூலம் பணி நிரந்தரம்செய்வது தற்போது நடைமுறையாக உள்ளது. நிரந்தர பணி பெறுவதற்கு தகுதி வாய்ந்த பருவகாலபணியாளர்கள் மாநிலம் முழுவதும் இருந்தாலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி நிரந்தரப்படுத்துவதை நிர்வாகம் தாமதப்படுத்து வதை ஏற்க இயலாது. ஏற்கனவே, நடைமுறையில் உள்ள ஒப்பந்தத்திற்கு உயர்நீதிமன்றமோ, உச்சநீதிமன்றமோ, எந்த தடையும் விதிக்கவில்லை. மாறாக ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது என உயர்நீதி மன்றம் தெளிவாக கூறியுள்ளது. அவ்வாறு இருக்கையில் 12(3) ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தி பருவ கால பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்வதில் தயக்கம் காட்டுவது ஏற்புடையதாக இல்லை. நிர்வாகம் வேறு காரணங்களுக்காக பருவ கால பணியாளர்களின் பணி நிரந்தரத்தை தாமதப்படுத்துகிறது என்கின்ற ஐயப்பாடு ஊழியர்கள் மத்தியில் நிலவுகிறது . எனவே  2012 - ஆம் ஆண்டு பணிபுரிந்த பருவ காலஊழியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் அனைத்து மண்டலங்களி லும் உள்ள அலுவலகம் கிடங்கு களில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் கணினி பிரிவு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும். தமிழ்நாடு நுகர்பொருள்வாணிபக் கழகத்தில் பணிபுரியக்கூடிய துப்புரவு பணியாளர்களின் சம்பளம் தொடர்பாக நிர்வாகம் அளித்த வாக்குறுதி இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. கடந்த ஆட்சியில் சட்டமன்றத்தில் அளித்த வாக்குறுதி அடிப்படையில் அவர்களை பணி நிரந்தரம் செய்யவும், இடைப்பட்ட காலத்தில் நிர்வாகம் ஏற்கனவே ஒத்துக் கொண்டது போல் அரசால் நிர்ணயிக்கப்பட்ட தினக்கூலியை உடன் வழங்க வேண்டும். தமிழக அரசு தற்போது ரத்து செய்துள்ள அகவிலைப்படி , ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு விடுப்பு கால பயண சலுகைகள் உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டபல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

;