மதுரை, அக்.12- பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளுக்கும் 18 வயது வரை கற்பிப்பதை உறுதி செய்யவும், பெண் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்கவும், குழந்தைத் திருமணங்களை தடுக்கவும் பாடுபட்டு வீரதீர செயல்புரிந்த குழந்தைகளுக்கு மாநில அரசு விருது வழங்க உள்ளது. தகுதியுடையவர்கள் விண்ணப்பங்களை 31.10.2019-க்குள் தலைமையாசிரியர், காவல்துறை, தொண்டுநிறுவனங்கள் முலமாக உரிய முன்மொழிவுகளுடன் மாவட்ட சமூகநல அலுவலரிடம் சமர்ப்பிக்கவேண்டும். கூடுதல் விவரங்களுக்கு: மாவட்ட சமூகநல அலுவலகம், 35, கிழக்கு குறுக்குத்தெரு, கே.கே.நகர், மதுரை-20. தொலைபேசி:0452?2580259 என்ற முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.