tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பாஜக அரசின் பொருளா தார பெருந்தொற்றுக்கு ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் உயிரிழந்து ள்ளனர் என ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார். மேலும் ஏழைகள், பணக் காரர்களுக்கு இடையே அதிக இடைவெளியை ஏற்படுத்திய பெருமை பிரதமர் மோடி அரசையே சாரும் எனவும் குறிப் பிட்டுள்ளார். 

நில அபகரிப்பு தொடர் பான அனைத்து வழக்கு களையும் 2 வாரங்களுக் குள் நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றங்களுக்கு மாற்றி  விசாரிக்க வேண்டும் என தமிழக நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றங்கள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. உச்சநீதி மன்ற உத்தரவுக்கு முர ணாக உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்ற த்துக்கு எந்த அதிகார மும் இல்லை எனவும் கூறி யுள்ளது. மேலும் வழக்கின் இறுதி விசாரணையை பிப்ரவரி 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. 

கொரோனா தடுப்பு விதி முறைகளை பின்பற்றி மும்பையில் 16 நாள் இடைவெளிக்கு பிறகு பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. நாட்டிலேயே கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மராட்டிய மாநிலத்தில் ஒமைக்ரான் பரவல் காரணமாக ஜன வரி 8ஆம் தேதி மூடப்பட்ட பள்ளிகள், 16 நாள் இடைவெளிக்கு பிறகு தற்போது திறக்கப் பட்டுள்ளன. 

மாநில அரசுகளுக்கு இது வரை 162.73 கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என ஒன்றிய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மாநில அரசுகளிடம் 13.83 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன எனவும் கூறப்பட்டுள்ளது.

இமாச்சல் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு கார ணமாக மலையேற்றம் சென்ற 2 பேர் உயிரிழ ந்துள்ளனர். பனிப்பொழி வின் தாக்கம் அடுத்த 3 நாட்களுக்கு நீடிக்கும் என்பதால் கவனமுடன் இருக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பனிப்பொழிவு காரணமாக 4 தேசிய நெடு ஞ்சாலைகள் மட்டு மில்லாமல் 731 மாநில சாலைகள் மூடப்பட்டு ள்ளன.

வடமாநிலங்களில் நில வும் கடும் பனிபொழி வால்  மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு ள்ளது. குறிப்பாக இமாச்சலப்பிரதேசம், சிம்லா, உத்தரகண்ட்டில் உள்ள சமோலி மாவட்டம், காஷ்மீரில் உறைபனி யால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டது. இதனிடையே அடுத்த 2 நாட்களுக்கு இமாச்சலில் பனிப்பொ ழிவு தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது.