tamilnadu

img

பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார்: அமைச்சர் பேட்டி

சென்னை, அக்.6- வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து வகையிலும் அரசு தயாராக இருக்கிறது என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார். வருவாய் மற்றும் பேரிடர்  மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன் வியா ழனன்று(அக்.6) சென்னை யில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “வானிலை ஆய்வு மையத்தி லிருந்து கிடைத்திருக்கும் தகவலின்படி, இந்த ஆண்டு  வடகிழக்கு பருவமழை 35  விழுக்காடு முதல் 75 விழுக் காடு அதிகமாக பெய்யும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார். தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் 1149 பேர், தமிழக  அரசின் மாநில பேரிடர் மீட்புக்  குழுவினர் 899 பேர் என  2048 பேரை அரசு தயா ராக வைத்திருக்கிறது.  மேலும் 121 பன்னோக்கு  மையங்கள் தயாராக இருக்கிறது. அனைத்து வகையிலும், பருவ மழையை எதிர்கொள்ள அரசு தயாராக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். பேரிடர் மேலாண்மை ஆணையரகத்தின் கட்டுப் பாட்டின் கீழ் சென்னை சேப்பாக்கத்தில் இயங்கி  வரும் மாநில அவசரக்  கட்டுப்பாட்டு மையம்  கூடுதலான அலுவலர்களு டன் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. இத்துடன்,பொது மக்கள் 1070 கட்டணமில்லா தொலைபேசி சேவை மூலம் பொது மக்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றது. மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவல கங்களில் 1077 என்ற  கட்டணமில்லா தொலை பேசியுடன் மாவட்ட அவசரக்  கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு  வருகின்றன. 94458 69848  வாட்ஸ் அப் எண் மூலம்  பொதுமக்கள் தங்களது புகார்களை பதிவு செய்ய  ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.  TNSMART செயலி மூலம்  வானிலை முன்னறிவிப்பு, வெள்ள அபாய எச்சரிக்கை மற்றும் மின்னல் எச்சரிக்கை  வழங்கப்பட்டு வருகிறது.பொதுவான எச்சரிக்கை நடைமுறை வாயிலாக செல்பேசிகள் மூலம் பொது  மக்களுக்கு புயல், கனமழை  வெள்ள அபாய எச்சரிக்கை அனுப்ப ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.