தமிழ் மொழிகளில் ஜெமினி லைவ்!
கூகுளின் ஜெமினி லைவ் தற்போது தமிழ் உட்பட 9 இந்திய மொழிகளில் பயன்படுத்தும் வகை யில் புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி நடைபெற்ற கூகுள் ஃபார் இந்தியா ( Google for India) நிகழ்வில், இந்தி யாவை மையமாகக் கொண்ட புதிய செயற்கை நுண்ண றிவு (AI) அம்சங்களை கூகுள் அறிவித்துள்ளது. அதன் படி, ஜெமினி லைவ் தற்போது தமிழ், இந்தி, தெலுங்கு, பெங்காலி, மராத்தி, கன்னடம், மலையா ளம், குஜராத்தி மற்றும் உருது ஆகிய மொழிகளில் பயன் படுத்தலாம். மேலும், இந்த சாட்பாட்டில் 10 புதிய குரல்களும் சேர்க்கப்பட்டுள்ளது. ஜெமினி லைவ் ஆரம்பத்தில் ஜெமினி அட்வான்ஸ் சந்தாதாரர்களுக்காக (Advance Subscribers) மட்டுமே வழங்கப்பட்டிருந்த நிலையில், அண்மையில் அனைத்து ஆண்ட்ராய்ட் பயனர்களும் இந்த அம்சத்தை பயன்படுத் தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆரோக்கியத்தை கண்காணிக்கும் ஸ்மார்ட் ரிங்!
மனித உடல் ஆரோக்கியம் மற்றும் செயல்பாட்டு கண்காணிப்பு திறன் கொண்ட ஸ்மார்ட் ரிங்கை ஓரா (Oura) நிறுவனம் உருவாக்கியுள்ளது. பின்லாந்து நாட்டைச் சேர்ந்த ஓரா ஹெல்த் லிமிடெட் என்ற சுகாதார தொழில்நுட்ப நிறுவனம் ஓரா ரிங் 4 (Oura Ring 4) என்ற புதிய சாதனத்தை அறிமுகப்ப டுத்தியுள்ளது. பயனர்கள் தூங்கும் போது, இந்த கருவி அவர்களின் ரத்த ஆக்சிஜனை கண்காணிக்க சிவப்பு மற்றும் அகச்சிவப்பு - இன்ஃபராரெட் (Infrared) எல்.இ.டி-களை பயன்படுத்துகிறது. அதேபோல், இதயத் துடிப்பு, இதயத் துடிப்பு மாறுபாடு மற்றும் சுவாச விகிதம் ஆகியவற்றை கண்காணிக்க பச்சை மற்றும் அகச்சிவப்பு - இன்ஃ பராரெட் (Infrared) எல்.இ.டி-களை பயன்படுத்துகிறது. இந்த கருவியில் உள்ள ஆக்சிலேரோ மீட்டர் (accele rometer) பயனர்களின் தினசரி இயக்கம் மற்றும் செயல்பாட் டைக் கண்காணிக்கிறது. இதில் உள்ள டிஜிட்டல் சென்சார் (digital sensor) உடல் வெப்ப நிலையில் ஏற்ற இறக்கங்களைப் பதிவு செய்கிறது. இதன் பேட்டரியை 20 நிமிடங்கள் முதல் 80 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 8 நாட்களுக்கு பயன்படுத்த முடியும். ஓரா நிறுவனம் இந்த ஸ்மார்ட் ரிங் கருவியை ஐஓஎஸ்(iOS) மற்றும் ஆண்ட்ராய்ட் சாதனங்களில் இணைத்து அம்சத்தை சோதனை செய்து வருகின்றது.
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை லைக் செய்யும் அம்சம்!
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை லைக் செய்யும் வசதி, பிரைவேட் மென்ஷன்ஸ் (Private Mentions) வசதி மற்றும் மற்றவர்களுக்கு ரீஷேர் (Re share) செய்யும் வசதி ஆகிய அம்சங்கள் வழங்கப் பட்டுள்ளன. இனி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட்களில் நண்பர் களின் கணக்குகளை குறிப்பிட்டும், டேக் செய்து பதிவிட முடியும். ஸ்டேட்டஸில் குறிப்பிடப்பட்டுள்ள நண்பர்கள், அந்த ஸ்டேட்டஸ் ரீஷேர் செய்யும் அம்சமும் வழங்கப் பட்டுள்ளது. வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் 5 நண்பர்களின் கணக்குகளை டேக் செய்ய முடியும். டேக் செய்யப்படும் நபர்களுக்கு நோட்டிஃபிகேஷனும் அனுப்பப்படும். தனிப்பட்ட முறையில் டேக் செய்யப்பட்ட கணக்குகள் மற்றவர்கள் பார்க்க முடியாது. அதேபோல், ஸ்டேட்டஸ்களை லைக் செய்து அதற்கு ரிப்ளை (Reply) செய்யும் அம்சமும் வழங்கப் பட்டுள்ளது. யார் லைக் செய்திருக்கிறார்கள் என்பதை ஸ்டேட்டஸ் வைத்தவர் மட்டுமே பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.