tamilnadu

பட்டாசு ஆலை வெடி விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.29 லட்சம் நிவாரணம்... அமைச்சர்கள் வழங்கினர்....

விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகள் வெடி விபத்தில் காயமடைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு  பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்  கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர்  தங்கம் தென்னரசு  ஆகியோர் ரூ.29 லட்சத்திற்கான காசோலைகளை ஞாயிறன்று வழங்கினர். 

வெம்பக்கோட்டை வட்டத்தில் மாரியம்மாள் பட்டாசு ஆலையில் கடந்த பிப்ரவரி 12- ஆம் தேதி  ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த நான்கு பேரின் வாரிசுதாரர் களுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.12 லட்சத்திற்கான காசோலைகளையும், வெடி விபத்தில் காயமடைந்த 13 நபர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் 13 லட்சத்திற்கான காசோலைகளையும், மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், முருகனேரி கிராமத்தில் ராஜலெட்சுமி பட்டாசு ஆலையில்  ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்த விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரின் வாரிசுதாரர்களுக்கு ரூ.2 லட்சத்திற்கான காசோலையும், தூத்துக்குடி மாவட்டம் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் மன உளைச்சல் ஏற்பட்ட ஒருவருக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலை  என மொத்தம் 20 நபர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.29 லட்சத்திற்கான காசோலைகள் வழங்கப்பட்டது.நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர்  மங்கள ராமசுப்பிரமணியன், திட்ட இயக்குநர் ஜெயக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெற்றி வேந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.

;