tamilnadu

img

பயிர்க் கடன் வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டும்!

சென்னை, ஜூன் 12 - கூட்டுறவு வங்கிகளில் கடந்தாண்டு  விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்களுக் கான வட்டியைத் தள்ளுபடி செய்ய  வேண்டும் என்று தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சாமி. நடராஜன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். “கடந்தாண்டு கூட்டுறவு வங்கி களில் வட்டியில்லா பயிர்க்கடன் பெற்ற  விவசாயிகள், கடனை 8 மாத தவ ணைக்குள் திருப்பிச் செலுத்தியிருக்க வேண்டும். கடந்தாண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12-இல் திறக்கப்பட்டது. குறுவை சாகுபடி அரசின் இலக்கை தாண்டி செய்யப்பட்டது, ஆனால், அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் ஜனவரி 28-ஆம் தேதி மூடவேண்டிய மேட்டூர் அணை அக்டோபர் 10-ஆம் தேதியே மூடப் பட்டது. இதனால் பின்பட்ட குறுவைக்கு போதிய தண்ணீரின்றி பல இடங்களில் பயிர்கள் கருகின, மகசூல் இழப்பும் ஏற்பட்டது, சம்பா சாகுபடி பெரியள வில் நடைபெறாத நிலை ஏற்பட்டது.  எனவே, விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்க் கடனை உரிய காலத்தில் கட்டமுடியாத நிலை  ஏற்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த நாடாளு மன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் விவசாயி கள் வாங்கியுள்ள கடன்கள் தள்ளு படி செய்யப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்திருந்தார். தமிழ்நாடு முழுவதும் திமுக தலைமை யிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு விவசாயிகள் பெரும் பங்காற்றியுள்ளனர். எனவே, தமிழ்நாடு அரசு விவசாயி களின் சுமையை குறைத்திடும் வகையில் கூட்டுறவு வங்கிகளில் விவ சாயிகள் வாங்கியுள்ள வட்டி யில்லா கடன்கள், தவணை தவறிய வற்றிற்கான வட்டியை தள்ளுபடி செய்திட வேண்டும்” என்று அந்த  அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.