மதுரை: பிரபல நாட்டுப்புற பாடகியும் திரைப்பட நடிகையுமான பரவை முனியம்மா(83) ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 23) அதிகாலையில் காலமானார்.
83 வயதான இவர் 50க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக கோளாறு மற்றும் வயது மூப்பு காரணமாக திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகியிருந்தார். மதுரை அருகே உள்ள பரவையில் முத்து நாயகி அம்மன் கோவில் அருகே உள்ள அவரது சொந்த வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.10 மணியளவில் காலமானார். ரவை முனியம்மாள் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதி சடங்கு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.