tamilnadu

img

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 7500 வழங்க கோரி போராட்டம்

மதுரை
தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் வேலை நேரத்தை 8மணிநேரத்திலிருந்து 12மணிநேரமாக அதிகரித்துள்ளதை கண்டித்தும். ஏழை ,எளிய   உழைப்பாளிகளுக்கு உணவுப்பொருள்களையும், உரிய நிவாரணத் தொகையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 7500ஐ  வழங்கக்கோரியும், புலம்பெயர்ந்ததொழிலாளர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தியும்சிஐடியு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில்  சமூக விலகலை கடைப்பிடிக்க கோரி  "பதாகை" ஏந்தி அறவழி போராட்டம் மதுரை  மேலப்பொன்னகரம்  பாரதியார்  ரோட்டில்  நடைபெற்றது.  சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் என். நன்மாறன்  தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேலப்பொன்னகரம் பகுதி குழுச் செயலாளர் வை. ஸ்டாலின், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் பி. கோபிநாத் ,பொருளாளர் ஜெ. பார்த்தசாரதி, மேலப்பொன்னகரம் பகுதிக்குழு தலைவர் ஆசாத், செயலாளர் நவீன், பொருளாளர் சிந்து மோகன் உள்ளிட்ட பலர் சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்து கொண்டனர்.

மாதர் சங்க நிர்வாகிகள் ஆர். சசிகலா, கே. ராஜேஸ்வரி, ஆர். லதா, வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எஸ். பாலா, மாவட்டச் செயலாளர் டி. செல்வா, சிஐடியு மாவட்டத் தலைவர் மா. கணேசன், செயலாளர் ஆர். தெய்வராஜ் மற்றும் வெகுஜனா அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர் தங்களுடைய வீடுகள்  முன் கோரிக்கை பதாகைகளுடன் அறவழி போராட்டம் நடத்தினர்.  

மதுரை புறநகர்
கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டுள்ள  அனைத்து வகை பணியாளர்களுக்கும் பாதுகாப்பு  உபகரணங்கள் வழங்கிடுக உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  மதுரை புறநகரில் சிஐடியு ,கட்டுமானம், ஆட்டோ, போக்குவரத்து, ஹைடெக் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பில் அவரவர் வீட்டு வாசலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் சிஐடியு மாவட்டத் தலைவர் செ.கண்ணன், மாவட்டச் செயலாளர் கே.அரவிந்தன், மாவட்டப் பொருளாளர் ஜி.கெளரி, மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.கே.பொன்னுத்தாய் உள்ளிட்ட தொழிற்சங்க  மாவட்ட  நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  மேலும் ஆட்டோ தொழிலாளர்கள் தனித்தனியே அவர்களின் ஆட்டோ முன்பு நின்று கோரிக்கைகளை வலியுறுத்திய பதாகைகளை  ஏந்தி நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்
திண்டுக்கல்லில் செவ்வாய் அன்று வாலிபர் சங்கம் சார்பில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சமூக இடைவெளி விட்டு ஒவ்வொரு தோழர்களும் தனித் தனியாக நின்று ஆர்ப்பாட்டம்    நடத்தினர். திண்டுக்கல் ஒன்றியத்தில் உலகம்பட்டி, ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் வீரலபட்டி, வேடசந்தூர் ஒன்றியத்தில் அச்சனம்பட்டி, குஜிலியம்பாறை ஒன்றியத்தில் மல்லப்புரம், கண்ணிமைக்கும்பட்டி, கோட்டா நத்தம், பழனி உள்ளிட்ட பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. மாநில துணைச் செயலாளர் பாலச்சந்திர போஸ், மாவட்டச் செயலாளர் கே.ஆர்.பாலாஜி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்


 

;