tamilnadu

img

நீ கூறியது பொய்தானே! - கு.மணி

 பொய்யா மொழியாரே
 பொய்யுரை புலவனே 
 நீ எழுதியது பொய் தானே 
 “மக்கள் பண்பு இல்லாதவர்  மரம்போல்வர் “
 ஏன் இந்த பழியுரை என் மீது 
 மனிதரோடு ஒப்பிட
 மாபாதகம் செய்தேனோ 

 நீ அறியாததா?
 நிழல் தந்தேன் 
 பூ தந்தேன் 
 காய் தந்தேன் கனியும் தந்தேன் 
 நடை வண்டியாய் வந்தேன் 
 நீ நடைபழகிடத்தானே 

 தொட்டிலாய் கட்டிலாய் மாறி 
 உம்மைத் துயில வைத்தேன் 
 ஓலைச்சுவடியில் 
 உன்னை எழுத வைத்து
 உன் புகழ் பரப்பினேன் 

 கட்டையில் போன பின்பும் 
 விறகு கட்டையாய் மாறி 
 உன்னோடு நான் எரிந்தேனே
 நானா பண்பில்லாதவன்
 பொய்யில் புலவரே   
 நீ கூறியது பொய் தானே....