tamilnadu

img

உற்சாகம் பொங்க தீக்கதிர் சந்தா வழங்கும் நிகழ்வு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வந்தவாசியில் சனிக்கிழமை நடைபெற்ற தீக்கதிர் சந்தா வழங்கும் நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்டக்குழு சார்பில் ஆண்டு சந்தா 120, ஆறு மாத சந்தா 80ம் மாத சந்தா 14 என  மொத்தம் 214 சந்தாக்களுக்கான தொகை.3 லட்சத்து 24 ஆயிரம் ரூபாயை  மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், தீக்கதிர் பொறுப்பாளர் பா.செல்வன் ஆகியோர் வழங்க மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரபத்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ராணிப்பேட்டை  மாவட்டக்குழு சார்பில் தீக்கதிர் ஆண்டு சந்தா 41, ஆறு மாத சந்தா 30, மாத சந்தா 50 என  மொத்தம் 121 சந்தாக்களுக்கான தொகை.1 லட்சத்து 22 ஆயிரம்  ரூபாயை  மாவட்டச் செயலாளர் என்.காசிநாதன், தீக்கதிர் பொறுப்பாளர் எஸ்.செல்வன் ஆகியோர் வழங்க மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். உடன் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.சங்கரி.

காஞ்சிபுரம் மாவட்டக்குழு சார்பில் தீக்கதிர் 177 சந்தாக்களுக்கான தொகை ரூ.1 லட்சத்து 49 ஆயிரத்து 800ஐ  மாவட்டச் செயலாளர் சி.சங்கர், தீக்கதிர் பொறுப்பாளர் எஸ்.சீனிவாசன் ஆகியோர் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் வழங்கினர். 

வேலூர் திருப்பத்தூர் மாவட்டக்குழு சார்பில் தீக்கதிர் ஆண்டு சந்தா 62, ஆறு மாத சந்தா 98 என  மொத்தம் 160 சந்தாக்களுக்கான தொகை.2 லட்சத்து 26 ஆயிரத்து 900 ரூபாயை  மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, தீக்கதிர் பொறுப்பாளர் கே.ஜெ.சீனிவாசன் ஆகியோர் வழங்க மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.

விழுப்புரம் மாவட்டக்குழு சார்பில் தீக்கதிர்  ஆண்டு சந்தா 303, 6 மாத சந்தா 138 என 441 சந்தாவுக்கான தொகை 7  லட்சத்து, 50 ஆயிரத்து, 900  ரூபாயை கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன்  வழங்க மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். உடன் மாநில செயற்குழு உறுப்பினர்கள் என்.பாண்டி, டி.ரவீந்திரன், மாவட்ட  செயற்குழு உறுப்பினர்கள் வி.ராதாகிருஷ்ணன்,பி.குமார், எஸ்.முத்துகுமரன், எஸ்.கீதா, ஜி.ராஜேந்திரன்,ஏ.சங்கரன், ஆர்.மூர்த்தி, எஸ்.வேல்மாறன், சே.அறிவழகன்,ஆர்டி.முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்டக்குழு சார்பில் தீக்கதிர் ஆண்டு சந்தா 86, ஆறு மாத சந்தா 118 என  மொத்தம் 204 சந்தாக்களுக்கான தொகை.2 லட்சத்து 95 ஆயிரத்து 900 ரூபாயை கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.தமிழ்அரசு வழங்க அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.நம்புராஜன், மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால்,  செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், ஜி.சம்பத், ஆர்.தமிழ்அரசு, சி.பெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.