tamilnadu

img

மதுரையில் கல்விக்கடன் மேளா: அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் துவக்கி வைப்பு

மதுரை மாவட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு சுமார் 500 கோடி மதிப்பில் கல்விக்கடன் வழங்கும் நோக்கில் மத்திய அரசின் "வித்தியா லட்சுமி போர்ட்டல்" வங்கிகள் மூலம்  வழங்கப்படும் கல்விக்கடன் மேளா அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் மாவட்ட  ஆட்சியர் மரு. எஸ், அனிஸ் சேகர் தலைமையில் புதனன்று  நடைபெற்றது நிகழ்ச்சியில்  அமைச்சர்கள் பி. மூர்த்தி, பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு கல்விக்கடன் முகாமை துவக்கி வைத்தனர்கள் மேலும் நிகழ்ச்சியில் மாநகராட்சி  ஆணையாளர் மரு. கார்த்திகேயன், சட்டமன்ற உறுப்பினர் கோ. தளபதி,  மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் வங்கித்துறை அதிகாரிகள், அமெரிக்கன் கல்லூரி முதல்வர் நவமணி கிறிஸ்டோபர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் 

நிகழ்ச்சிக்கு பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில் 

மதுரை மாவட்டத்தில் இதுவரை 60 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்கப்பட்டு உள்ள நிலையில், உயர்கல்விக்கு கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல் ஒரு மாணவர் கூட இருக்க கூடாது எனும் நோக்கில் இந்த முகாம் நடத்தப்படுகிறது. ஜம்மு காஷ்மீரில் கல்விக்கடன் வழங்க ஒன்றிய அரசு அளிக்கும் கவனத்தை மற்ற மாநிலங்களுக்கும் வழங்க முன்வர வேண்டும்.  கல்வி கடன் அளிப்பது என்பது தனி நபருக்கு கொடுக்கும் கடன் அல்ல, அது ஒரு தலைமுறைக்கு கொடுக்கும் கடன். எனவே, பெற்றோர்களின் வராக்கடனை கருத்தில் கொள்ளக்கூடாது. யாருடைய மனுக்களும் நிராகரிக்கப்பட கூடாது என வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளோம் என்று கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கல்லூரி மாணவர்களுக்கான கல்வி கடன் ரத்து செய்வது குறித்து முதல்வர் பரிந்துரையின் பேரில் ஆய்வு நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.  கல்விக்கடன் பெற்று படித்தவர்கள் வேலை வாய்ப்பில்லாமல் கல்வி கடனை செலுத்த முடியாத நிலையை திருத்தம் செய்வதில் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் அரசு மற்றும் தனியார் வங்கிகள் சார்பில் 15 சேவை மையங்களும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 3 உதவி மையங்கள் இன்று மொத்தம் 18 உதவி மையங்கள் மாணவர்களுக்கு பதிவு செய்து கொடுப்பதற்காக கல்லூரியை சேர்ந்த என்எஸ்எஸ் மாணவர்கள் சார்பில் 12 மையங்கள் மற்றும் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் வங்கிக்கடன் பெற வரும் நபர்களுக்கு வழிகாட்டிகளாக இருந்து செயல்பட்டனர்.

நிகழ்ச்சியில் வங்கிகள் மூலம் கடன் பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர்கள் முன்னிலையில் காசோலைகள் வழங்கப்பட்டது மேலும் யூனியன் வங்கி சார்பில்  16 மாணவர்களுக்கான ரூபாய் 1 கோடியே 42 ஆயிரம்  கல்விக் கடன் காசோலையை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

;