tamilnadu

img

திருவிடைக்கழியில் டாக்டர்.அம்பேத்கரின் 134 ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

திருவிடைக்கழியில் டாக்டர்.அம்பேத்கரின்  134 ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி ஒன்றியம், திருவிடைக்கழியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் டாக்டர்.அம்பேத்கரின் 134 ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் புதனன்று மாலை கட்சியின் ஒன்றிய செயலாளர் ஏ. ரவிச்சந்திரன் தலைமையில் நடைப்பெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் “அம்பேத்கரும் ஜனநாயகமும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின், டி. சிம்சன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் அம்மையப்பன், குணசுந்தரி, டி.ஆர். ராணி, அய்யப்பன், ஒன்றியக்குழு உறுப்பினர் ஜோதிபாசு ஆகியோர் உரையாற்றினர்.  ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள், நூற்றுக்கணக்கான கிராம பொதுமக்கள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர். நிறைவாக கிளைச் செயலாளர் எஸ்.அருள்ஜோதி நன்றி கூறினார்.