சிறுவயதிலிருந்து எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் உண்டு. அது சாத்திய மற்றது என்று ஒதுக்கி விட முடியாது. ஏனென்றால், வாழ்க்கையில் சாதிப்ப தற்கு உந்துதல் தேவை. அப்படி இருந்தால் எதையும் சாதித்துக் காட்ட முடியும். முடி யாத சாதனைகளை கூட சாதித்ததற்கு நூற்றுக்கணக்கான எடுத்துக்காட்டுகள் உள்ளன. அதில் ஒன்று தான் சென்னையை சேர்ந்த 8 வயது மாற்றுத்திறனாளி சிறுவனின் சாதனையாகும். மாற்றுத்திறனாளிகளில் விழி இழந்தோர், காதுகேளாதோர், மூளை முடக்குவாதம், மனவளர்ச்சிக் குன்றி யோர், ஆட்டிசம் எனப்படும் புற உலகச் சிந்தனை இல்லாதோர் என பல வகை களில் வகைப்படுத்தலாம். இவர்களில் சில பிரிவினர் தங்கள் வேதனைகளை கூட பிறரிடம் சொல்லி அழவும், வழித் தேடவும் முடியாமல் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
உலக மக்கள் தொகையில் 15 விழுக்காடு மக்கள் ஏதேனும் ஒரு வகையான ஊனத்தால் பாதிக்கப்பட்டு, வாழ் நாளை கடத்த வேதனைகளை அனுபவித்து வரு கின்றனர். அதிலும் குறிப்பாக 20 விழுக்காட்டினர் ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம். இந்த பின்னணியில்தான், சென்னை நீலாங்கரையில் எட்டு வயது மாற்றுத் திறனாளி சிறுவன் 60 நிமிடங்கள் தண்ணீரில் மிதந்து சாதனை படைத்துள்ளான். அந்த சிறுவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஆவடி தொகுதி செயலாளரும் மாநக ராட்சி கவுன்சிலருமான ஜானின் மூத்த மகள் அபிநயா-எழில் விஜய் தம்பதியின் மகன் பிரின்ஸ்டன் ஆவார். ‘ஏஞ்சல்மேன்’ குரோமோசோம் சிண்ட்ரோம் (நோய்க்குறி) தாக்கம் என்பது உலகில் அரிய வகை கோளாறுகளில் ஒன்றாகும். இது நரம்பு மண்டலத்தை முக்கியமாக பாதிக்கும் ஒரு அரிய மரபணு நரம்பியல் வளர்ச்சி கோளாறாகும். இதில் பாதிப்பது ஒரு சில குழந்தைகளே. அதில் ஒருவன் சிறுவன் பிரின்ஸ்டன்.
97 விழுக்காடு நோய் பாதிப்பிலும் ஆர்வம்-விடாமுயற்சி
அவரது பெற்றோர் எழில் விஜய்-அபிநயா சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இங்கிலாந்தில் வசித்து வந்தனர். குடும்பத்தின் மூத்த மகன் பிரின்ஸ்டனுக்கு நோய் பாதிப்பு 97 விழுக்காடு இருப்பது மருத்துவ சோதனைகள் மூலம் கண்டு பிடிக்கப்பட்டது. இதனால் சிறுவன் பிரின்ஸ்டன் அடிக்கடி சிரிக்க முயன்றாலும் பேச முடியாது. நிற்கவோ, நடக்கவோ இயலாது. ஊர்ந்து தான் செல்ல முடியும். சாப்பாடும் தானே சாப்பிட முடியாது என்பதால் தமிழ்நாட்டுக்கு திரும்பினர். சென்னை முட்டுக்காடு அருகே கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் மிகச் சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளுடன் மாற்றுத்திற னாளிகள் மேம்பாட்டுக்காக தேசிய நிறு வனமான ‘நந்தவனம்’ மாதிரி சிறப்பு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பிரின்ஸ்டனை சேர்த்தனர். தினமும் சக்கர நாற்காலியில் (வீல் சேர்) தான் பள்ளிக்கு அழைத்துச் செல்கின்றனர்.
நீச்சலில் ஆர்வம் கொண்ட நான்கு வய தாகும் பிரின்ஸ்டனின் தம்பி ராபின்ஸ்ட னை நீலாங்கரை அருகிலுள்ள லோகன் நீச்சல் மற்றும் அக்வா தெரபி பயிற்சி மையத்தில் சேர்த்தனர். வேடிக்கை பார்ப்பதற்காக அடிக்கடி பிரின்ஸ்டனையும் அழைத்துச் சென்றனர். ஒரு நாள் அந்த நீச்சல் குளத்தில் பிரின்ஸ்டனையும் இறக்கி விட்டனர். அப்போதுதான் அவனுக்குள் ளும் நீச்சல் அடிப்பது, தண்ணீரில் நீண்ட நேரம் மிதக்கும் ஆர்வம் இருந்ததை பயிற்சியாளர் கண்டுபிடித்தார். அதனைத் தொடர்ந்து, சிறப்புக் கவனம் செலுத்தி பயிற்சி கொடுத்தனர். ஆரம்பத்தில் ஐந்து முதல் 15 நிமிடம் வரைக்கும் தண்ணீரில் மிதந்துள்ளார். பின்னர், நேரத்தை படிப்படியாக அதிகரித்து, இம்மாதம் 21 ஆம் தேதி ஏராளமானோர் கூடியிருந்த நிலையில் 60 நிமிடங்கள் தண்ணீரில் மிதந்து சாதனை படைத்திருக்கிறார்.
முந்தைய சாதனை முறியடிப்பு
இதற்கு முன்பு, இதே வயதைக் கொண்ட மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவர் 33 நிமி டங்கள் 42 வினாடிகள் தண்ணீரில் மிதந்தது உலக சாதனையாகும். தற்போது, தொடர்ச்சியாக 60 நிமிடங்கள் தண்ணீரில் மிதந்திருக்கும் பிரின்ஸ்டன் அந்த சாதனை யை முறியடித்து முதல் இடத்தை பிடிக்க உள்ளார். இதை லிம்கா மற்றும் ஆசிய உலக சாதனை புத்தகங்களில் இடம் பெறு வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. சிறு வயதில் இருந்தே நீச்சலில் ஆர்வம் அதிகம் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர் நீச்சல் பயிற்சியில் ஈடுபடுத்தினர். அது, மகன் மாற்றுத்திறனாளி என்பதை மறுக்கும் அளவுக்கு பயனளித்திருக்கிறது. சிறுவன் பிரின்ஸ்டன் மாற்றுத்திறனாளி என்றாலும் லோகநாதனின் பயிற்சி, ஊக்கம் மற்றும் கடும் முயற்சியால் தண்ணீரில் மிதக்கும் பயிற்சியை மேற்கொண்டு சர்வதேச யோகா தினத்தில் உலக சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சில மாதங்களுக்கு முன்புதான், இதே பகுதியில் ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தை கள் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் ஆட்டிசம் குறைபாடுடைய 11 வயது சிறுவன் லக்சய், சென்னை நீலாங்கரை முதல் மெரினா கடற்கரை கண்ணகி சிலை வரை சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தை மூன்று மணி நேரம் 18 நிமிடத்தில் நீச்சலடித்து இலக்கை அடைந்து சாதனை படைத்தார். இந்தச் சாதனை ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த சாதனை சிறுவனுக்கு பயிற்சி யாளர்கள், உறவினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் உற்சாக வர வேற்பு அளித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தனர். அதே பகுதியில் மற்றொரு மாற்றுத்திற னாளி 8 வயது சிறுவன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்க இருப்பதால் அவன் படித்து வரும் பள்ளியின் தாளாளர் முதல் நீலாங்கரை பகுதி மக்கள் வரைக்கும் பாராட்டி வருகின்றனர். இதனால், ஒட்டுமொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் உள்ளது. இத்தகைய மாற்றுத்திறனாளி குழந்தை களின் திறமைகளை வளர்த்தெடுக்க அனைவரும் முன்வர வேண்டும்.
- சி. ஸ்ரீராமுலு