tamilnadu

img

தீபாவளிக்கு 16,500 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு

சென்னை,அக்.17- இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 16,500 சிறப்பு பேருந்து இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 3 நாட்களுக்கு சென்னையில் இருந்து மட்டும் 10,500 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக வருகிற 19 ஆம் தேதி போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.இந்த ஆலோசனைக்குப் பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5.5 லட்சம் மக்கள் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அதற்கான பணிகளை திட்டமிட இருப்பதாகவும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்ய றறற.வளேவஉ.in என்ற இணையதளத்தின் வாயிலாகவும், கூசூஞளுஊ என்ற மொபைல் ஆப் மூலமும் முன்பதிவு செய்து கொள்ளலாம். தற்போது தீபாவளி  பயணத்திற்கான  டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்து விட்டதாக கூறப்படுகிறது.