ஈரோடு, ஏப்.13- புன்செய் புளியம்பட்டி நகராட்சியின் தீர் மானம், திட்டமிடப்பட்ட உள்நோக்கம் கொண்ட, பட்டியலின மக்களுக்கு எதிரான நடவடிக்கை என மார்க்சிஸ்ட் கட்சி விமர்சனம் செய்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 22.11.2022 அன்று அதிகாலை 5 மணிக்கு ஈரோடு மாவட்டம், புன்செய்புளி யம்பட்டி நகராட்சியின் வாரச்சந்தையில் கடந்த 50 ஆண்டு காலமாகச் செயல்பட்டு வந்த பட்டியலின மக்களான அருந்ததியர்கள் 13 குடும்பங்களுக்கு சொந்தமான மாட்டிறைச்சி கடைகளை நகராட்சி நிர்வாகம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி புல்டோசரை வைத்து இடித்துத் தரைமட்டமாக்கி விட்டது. இதனால் அந்தப் பட்டியலின மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வீதிக்குத் தள்ளப்பட்டார்கள். அவர்கள் மீண்டும் மாட்டிறைச்சி கடை களை வழக்கம்போல் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று நகராட்சிக்கும், மாவட்ட ஆட்சி யர் அவர்களுக்கும், மாவட்டத்தில் உள்ள வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் மனுக் கொடுத்து நியாயம் கேட்டார்கள்.
குடியேறும் போராட்டம்
அவர்களுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியும் பல கட்ட போராட்டங்களையும், பேச்சு வார்த்தைகளையும் நடத்தி வந்தார்கள். பிரச்ச னைக்கு நியாயம் கிடைக்காமல் போனதால் கடந்த 11.4.2023 காலை 10 மணி முதல் நக ராட்சி அலுவலகத்தில் காலவரையின்றி குடி யேறும் போராட்டம் நடைபெற்றது. அன்று இரவு நகர்மன்ற ஆணையாளர் மற்றும் நகராட்சி தலைவர் ஆகியோர் முன்னிலையில் நடை பெற்ற பேச்சுவார்த்தையில் நகர்மன்றத்தின் சிறப்புக் கூட்டம் ஒன்றை 13.4.2023 அன்று நடத்தி சந்தையில் ஸ்லாட்டர் ஹவுஸ், கடைகள் கட்டுவதற்கும் தீர்மானம் கொண்டு வருவது என்றும், இடைக்காலமாக மாட்டிறைச்சி வியா பாரிகள் கடை நடத்தும் வாய்ப்புகளை உரு வாக்கித் தருவது என்றும் நகராட்சி தலை வர் கொடுத்த உறுதிமொழி ஏற்றுக் கொள் ளப்பட்டது. இடைக்கால ஏற்பாடான, மாட்டிறைச்சி கடை களை வழக்கம்போல் நடத்துவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுப்பதாக திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் நல்லசிவம் அவர் களும், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர் களும் தொலைபேசி வழியாக உறுதிமொழி கொடுத்ததைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
சட்டவிரோத தீர்மானம்
ஆனால் 13.4.2023 அன்று நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. அதில் தனி தீர்மான மான புளியம்பட்டி வாரச்சந்தையில் ஸ்லாட்டர் ஹவுஸ், மாட்டிறைச்சி கடைகளைக் கட்டுவது குறித்து தீர்மானம் ஏதும் கொண்டுவரப்பட வில்லை. மாறாக தங்களுக்கு ஆதரவான 6 மாட்டிறைச்சி வியாபாரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் உள்ளூர்க்காரர்கள் என்று காரணம் கூறி சந்தைக்கு வெளியில் இருக்கிற கால்நடைத் துறைக்குச் சொந்தமான மேய்ச்சல் தரை (சர்வே எண்.15/4) புறம் போக்கு நிலத்தில் மாட்டிறைச்சி கடைகளை கட்டிக் கொடுப்பதாகத் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். இதில் கீழ்க்கண்ட அம்சங் களை கவனத்தில் கொள்ள வேண்டும். ஸ்லாட்டர் ஹவுஸ் தேவை என்பதை ஆரம்பம் முதலே வலியுறுத்திக் கொண்டிருந்த நிலையில், தீர்மானம் போடும்போது அதுபற்றி எதுவும் முடிவு செய்யாதது சரியானதல்ல. 13 மாட்டிறைச்சி கடைகளை நகராட்சி நிர்வாகம் இடித்து தரைமட்டமாக்கிவிட்ட நிலை யில் ஆறு கடைகள் கட்டுவதற்கான தீர்மானம் என்பது உள்நோக்கம் கொண்டது.
வியாபாரிகளை உள்ளூர், வெளியூர் என்று பிரித்து தங்களுக்கு ஆதரவான வியா பாரிகளைத் தேர்வு செய்து உள்ளூர்க்காரர்கள் என காரணம் காட்டி கடைகள் கொடுப்பதாகத் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது முற்றிலும் சட்டவிரோதமானது, அரசியல் சாசனத்திற்கு எதிரானது, நாடுமுழுவதும் உள்ள நடை முறைகளை மீறுவதாக உள்ளது. பட்டியலின மக்களின் வாழ்வாதாரம் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அது பற்றிக் கொஞ்சமும் அக்கறை செலுத்தாமல் தீர்மானம் நிறைவேற்றி இருப்பது, கடைகள் இடிப்பு முன்கூட்டியே திட்டமிடப்பட்ட உள்நோக் கம் கொண்ட, பட்டியலின மக்களுக்கு எதிரான நடவடிக்கை என்பதைத் தெளிவுபடுத்துகிறது. ஊர் மக்களின் நல்வாழ்க்கையைக் கவ னத்தில் கொள்ள வேண்டும் என்ற நிலையில் இருந்து மாறி குறிப்பிட்ட மக்களுக்கு எதிரான நடவடிக்கை என்பதும், அதற்கு அதிகார பலத்தை முழுமையாகப் பயன்படுத்துவது என்பதும் முழுக்க முழுக்க மக்கள் விரோத, மோசடியான செயலாகும். இந்நிலையில் நகராட்சி மண்டல இயக்கு நர் அவர்கள், நகராட்சி நிர்வாக இயக்குநர் ஆகியோர் இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொள் ளாமல் நிராகரிக்க வேண்டும்.
பதவி நீக்குக!
இந்த பிரச்சனைக்கு அடிப்படை காரண மாக இருப்பவரும், 5 மாத காலமாக நடை பெற்று வருகிற இந்தப் போராட்டத்தை முடி வுக்குக் கொண்டுவருவதில் அக்கறை செலுத்தா மல் இருப்பவரும், இப்படிப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றக் காரணமாக இருப்பவருமான நகர்மன்ற துணை தலைவர் சிதம்பரம் அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வரைக் கேட்டுக் கொள்கிறோம். பட்டியலின மக்களான 13 அருந்ததியர் குடும்பங்களுக்கும் நியாயம் வழங்கும் வகை யில் இடைக்காலமாக மாட்டிறைச்சிக் கடை களை நகராட்சி வாரச்சந்தைக்குள் நடத்து வதற்கு ஏற்பாடு செய்து தர வேண்டும். புன்செய் புளியம்பட்டி நகராட்சி வாரச்சந் தைக்குள் ஸ்லாட்டர் ஹவுஸ் கட்டி, நிரந்தர மாட்டி றைச்சி கடைகளை கட்டிக் கொடுக்க வேண்டும். சமூக நீதி மறுக்கப்பட்ட 13 குடும்பங்கள் நிம்மதியாக வாழ்க்கை நடத்துவற்கு அரசு உறுதியளிக்க வேண்டும். அதன்படி புன்செய் புளியம்பட்டி நகராட்சி வாரச்சந்தையில் இடைக்கால ஏற்பாடாக வியாபாரம் செய்வ தற்கு தமிழ்நாடு அரசும், முதல்வரும் மாட்டி றைச்சி கடைகளைக் கட்டித்தர வேண்டும். அதன் மூலம் சமூக நீதியைக் காப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.