tamilnadu

img

நீரின்றி கருகும் பயிர்கள்; கண்ணீர் சிந்தும் விவசாயிகள்

நாகப்பட்டினம், ஆக.4 - நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியத்தில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.  ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 அன்று டெல்டா விவசாய பாசனப் பகுதிக்கு தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. திறந்து விடப்பட்ட தண்ணீர், கடைமடை மாவட்டமான நாகப்பட்டினத்திற்கு வந்த வுடன், விவசாயிகள் மகிழ்ச்சியுடன் குறுவை சாகுபடிக்கு தயாராக வைக்கப்பட்ட நிலங் களில் நேரடி விதைப்பு மற்றும் நடவு செய்தல் முறை மூலம் சாகுபடி செய்தனர்.  கடந்த மூன்று வாரமாக பயிரிடப்பட்ட விவசாய நிலங்களில் தண்ணீரின்றி விதைக்கப்பட்ட பயிர்கள் கருகி வரு கின்றன. பாசன கால்வாய்களில் நீர் வரத்து முற்றிலும் குறைந்துவிட்டது. திறந்து விடப்பட்ட தண்ணீரை நம்பி, விதைக்கப் பட்ட பயிர்கள் கருகுவதை பார்த்து விவ சாயிகள் கண்ணீர் சிந்துகின்றனர். ஆற்றில் தண்ணீர் வராத பட்சத்தில் மழையாவது பெய்யும் என்று நம்பியிருந்தனர். ஆனால் கடந்த மழையும் பொய்த்து விட்டது. வெயி லின் தாக்கமோ கடுமையாக உள்ளது. சுட்டெரிக்கும் வெயிலால் டெல்டா பகுதி களில் உள்ள மரங்களும் கருகும் நிலை யில் உள்ளன. இதனை கருத்தில் கொண்டு, “கருகும் பயிர்களை காப்பாற்றிட தண்ணீர் கொடு, இல்லையேல் நிவாரணம் வழங்கு” என்ற முழக்கத்துடன், விவசாயிகளின் பயிரையும் உயிரையும் பாதுகாத்திட தலைஞாயிறு கடை த்தெருவில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.  போராட்டத்திற்கு தலைஞாயிறு ஒன்றி யச் செயலாளர் அ.ராஜா தலைமை வகித் தார். சிபிஎம் நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து போராட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.லதா பேசினார். வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் டி. அருள்தாஸ் மற்றும் ஒன்றிய குழு உறுப் பினர்கள் கலந்து கொண்டனர்.