தேனி, ஜூன் 2- தேனி மாவட்டம் கூடலூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 65 வயது மூதாட்டி, ஐந்து வயது சிறுவன், கம்பத்தை சேர்ந்த 25 வயது வாலிபர், 65 வயது முதியவர், சின்னமனூரை சேர்ந்த 54 வயது பெண் என மொத்தம் ஐந்து பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது. இவர்கள் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் கூடலூ ரைச் சேர்ந்த மூதாட்டி மற்றும் குழந்தை ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் இருந்து வந்த முன்னாள் ராணுவ வீரரின் குடும் பத்தைச் சேர்ந்தவர்கள். கம்பத்தை சேர்ந்த வாலிபர் மற்றும் முதியவர், சின்னமனூரை சேர்ந்த பெண் ஆகியோர் சென்னையில் இருந்து வந்த வர்கள் ஆவர். தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்த வர்களில் முத்துலாபுரத்தை சேர்ந்த முதிய வர் மற்றும் இரண்டு குழந்தைகள், தேனி கோவிந்தன்நகரை சேர்ந்த சிறுவன், தேனி யைச் சேர்ந்த பெண் என மொத்தம் ஐந்து பேர் திங்களன்று குணமடைந்து வீடு திரும்பினர்.