tamilnadu

img

சமகால சமூக அநீதி சம்பவங்களின் கதைத் தொகுப்பு - செ.தமிழ்ராஜ்

மீட்டாத வீணையும் மீட்கும் கீதங்களும் எனும் சிறு கதைத் தொகுப்பை எழுதியுள்ள பெரணமல்லூர் சேகரன் படைப்புல கில் தொடரந்து செயல்பட்டு வரு பவர். ஏதேனும் ஒரு கதையோ, கவிதையோ, கட்டுரையோ வாசிக்கா மல் கடக்க முடியாது எனும் படியாக இவரின் எழுத்துச் செயல்பாடு இருக்கும். 2000 ஆம் வருடம் “புதியதாய்” எனும் சிறுகதைத் தொகுப்பின் மூலம் ஆரம்பித்து இதுவரை இப்புத்தகத்தை சேர்த்து 24 நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார். பல நூல்கள் பரிசு பெற்ற தகுதி யோடு ஒளிர்கிறது. இத்தொகுப்பில் மொத்தம் 19 கதைகள் இடம் பெற்றுள்ளன. கதைகள் என்பதை விட சம கால  சமூக அநீதி சம்பவங்களின் தொகுப்பு  என்று கூறலாம். எதிர்கால தலை முறைக்கு எழுதி வைத்துள்ள சான்றாவணம் என்று கூட கூற லாம். அந்த அளவு சமூக பாதிப்பை  உள்வாங்கி கதையாக்கம் செய்துள்ளார். முதல் கதையான “வன்மமேகம்” என்பது திருநெல்வேலியில் உள்ள நாங்குநேரியில் சாதீ வெறியர்களால் வெட்டப்பட்ட அண்ணன் தங்கையின் சம்பவத்தை அதீதப் புனைவின்றி யதார்த்தமாகவே பதிவு செய்துள் ளார்.

மேல் பாதிமங்கலத்தில் சீல்  வைக்கப்பட்ட திரெளபதி அம்மன்  கோவிலை முன்வைத்து “பிரார்த்த னை” என்ற சிறுகதையை நேர்முகச் சிந்தனையோடு அதற்கு தீர்வு காணும் விதத்தோடு கதையை பின்னி யுள்ளது பாராட்டிற்குரியது. மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த வேங்கை வயல் பிரச்ச னையை இதுவரை முடிவுக்கு கொண்டுவரப்படாத, 21ஆம் நூற்றாண்டிலும் மனித சிந்தனையில் சாதீய மலம் கலந்த அநீதியை கதை யாக்கம் செய்துள்ளார்  “பூ வயல்” சிறுகதையில். பழங்குடியினப் பெண்கள் இருளர் குடிகளை, காவல்துறையினர், ஆதிக்கசாதி மிருகங்களும் படுத்தும் பாட்டை “வன ரோஜா”, “பட்டா”, “நன்னயம்”, “விடுதலையும் கைதும்” ஆகிய கதைகள் வாயிலாக மிக அழுத்தமாக தன் எதிர்ப்பு குரலை சிறுகதையில் கதாபாத்திரங்கள் வாயி லாக பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். ஆன்லைன் ரம்மிக்கும் ஒரு கதை “சூது” என்று தலைப்பிட்டு செய்திருக்கிறார். இன்று பல குடும் பங்கள் சிக்கி சீரழிந்து தெருவிற்கு வரும் நிலையையும் பொருத்தமாக கதையாக்கம் செய்திருக்கிறார். மக்கள் நலனற்ற மத்திய அரசு சூதாட்டக்காரர்களுடன் நடத்தும் கொலைபாதகச் செயலிது. இப்படி தொகுப்பு முழுவதும் ஒடுக்கப்பட்ட, பட்டியலின, பழங்குடிகளின், பெண்களின், குழந்தைகளின் உண்மைகள் யாவும்  கதைஉருவம் கொடுத்து எழுத்தின் வாயிலாக, ஒரு சமூகத்தின் சாட்சிய மாக நின்றுள்ள எழுத்தாளரை நிச்சயம் பாராட்டலாம். நிகழ்கால உண்மைகளை கதையாக்கம் செய்கையில் அது கட்டுரையாக திரிந்து விடும் அபாய மிருக்கிறது. அது இந்தத் தொகுப்பில் பல இடங்களில் காண முடிகிறது. இலக்கிய வடிவிலேயே மேலும் செறி வாக சொல்ல முடியும் அதை சொல்வ தற்கான தகுதியும் எழுத்தாளர் பெரணமல்லூர் சேகரனுக்கு உண்டு. தொடர் இலக்கியச் செயல்பாடு அதை  மாற்றிக் காட்டும். அன்பு எழுத்தாள ருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

மீட்டாத வீணையும்  மீட்கும் கீதங்களும்
(சிறுகதைகள்)
ஆசிரியர் : பெரணமல்லூர் சேகரன்
பக்கம் 160 : விலை 170
வெளியீடு : நூலேணி பதிப்பகம்