சாதி வேறுபாடு, அதனால் ஏற்படும் மோதல்கள் போன்ற வைகளைக் கருவாகக் கொண்டு சமீப காலத்தில் பல திரைப்படங்கள் வெளி யாகியுள்ளன. தற்போது திரையில் வெளியாகியுள்ள பராரி திரைப்படமும் அந்த வகையைச் சேர்ந்ததுதான். ஆனால், புதிய தளத்தில், புதிய பரிமா ணத்தில் இயக்குநர் இந்த சமூகப் பிரச்ச னையை கையாண்டுள்ளார். கிராமங் களில் பஞ்சப்பராரி என்று ஏழை எளிய மக்களைக் குறிப்பிடுவதுண்டு. இத்த கைய மக்களை, விளிம்புநிலை மக்கள் என்று நாம் எடுத்துக் கொள்ளலாம். ஒரு கிராமத்தில் பட்டியலின மக்க ளும், பட்டியலினம் அல்லாத ஏழை மக்க ளும் வாழ்கிறார்கள். இந்த இரண்டு சமூகங்களைச் சார்ந்த மக்களும் வாழ்க்கைத்தரத்திலும், வாழ்வாதாரத்தி லும் பெரிதாக வேறுபடவில்லை. இருந் தாலும், புரையோடிப்போன சாதிப் படி நிலை, சாதிய வேறுபாடுகள் கிராமத்து மக்களின் வாழ்க்கையில் பல பிரச்சனை களில் மோதலாக வெடிக்கிறது. வர்க்கத் தால் ஒன்றாக இருந்தாலும், சாதியால் பிளவுபட்டு மோதுகிறார்கள். சாதியின் காரணமாக பல பிரச்சனை களும் ஏற்படுகின்றன. வழிபடும் சாமி யும் கோயிலும் இருசாராருக்கும் பொது வானது. ஆனால் இதிலும் மோதல் வெடிக்கிறது. கிராமத்தின் எல்லா மக்க ளுக்கும் பொதுவாக அமைந்த பாறை யைப் பயன்படுத்துவதில் பாகுபாடு வரு கிறது. இத்தகைய சூழல் நிலவுகிற கிரா மத்தில் பட்டியல் சாதியைச் சார்ந்த இளை ஞரும், பட்டியலினத்தை சாராத ஒரு பெண்ணும் நட்புக் கொள்கிறார்கள். வேலைத் தளத்திலும் சந்திக்கிறார்கள். சாதி வேறுபாட்டால் ஏற்படும் முரண் பாட்டுடன், சாதியை மறுத்த காதலும் சேரும்போது இரண்டு பகுதி மக்களை பிளவுபடுத்துகிறது. இத்தகைய வேறு பாடும், மோதலும், பதற்றமும் எப்போது வெடிக்கும் என்ன ஆகும் என்று படம் பார்ப்பவர்கள் திகைக்கும் போது, அதை கையாளக் கூடிய அடிப்படை யில் திரைக்கதையும், காட்சிகளும் அமைந்துள்ளன. தமிழ்நாட்டிலும், ஏன் நாடு முழு வதும் கிராமத்து மக்களுக்கு தாங்கள் வாழும் கிராமத்திலேயே போதுமான வேலையும் வருமானமும் கிடைக்காத நிலையில் வேலைக்காக புலம் பெயர்ந்து செல்லவேண்டிய நிலைமை உள்ளது. அவ்வாறே இந்த கிராமத்தின் ஏழை களும் புலம் பெயர்ந்து செல்கிறார்கள். அண்டை மாநிலமான கர்நாடகத்தில் ஒரு ஆலையில் இரு தரப்பு மக்களும் வேலைக்கு செல்கிறார்கள்.
கிராமத்தில் நிலவிய சாதி வேறுபா டும், காதலும், வேலைத் தளத்திலும் முரண்பாட்டை ஏற்படுத்துகிறது. ஆனால் அங்கு மொழி அடிப்படையி லான புதியதொரு முரண்பாடும் சேர்ந்து கொள்கிறது. சாதாரண தொழிலா ளர்களை மோதவிடும் சக்திகள் யார் என்பதைச் சொல்வதுதான் இந்த படத்தின் சிறப்பம்சம். இருவேறு சாதி யாக இருந்தாலும் அவர்களின் வாழ் நிலை ஒன்றாகவே இருப்பதும், மொழி வேற்றுமையில் வெறுப்பை வளர்த்துக் கொள்ளும் அடியாள், சாதாரண தொழி லாளியாகவே இருப்பதும் மிக இயல்பானது. சாதி, மொழி வெறியை தூண்டிவிடும் அரசியல்வாதிகளின் சுயநல கணக்குகள் நன்றாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தண்ணீர் கொடுக்க மறுப்பதில் வெளிப்படும் அரசியல் இந்தப் படத்தின் இரண்டு பகுதிகளிலும் வெவ்வேறு பரிமாணங்களில் வருகிறது. இரண்டுமே மிக முக்கியமானது. புலம்பெயர்ந்து உழைக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கைப் போராட்டத்தின் பின்னணி யில் சமகால அரசியல் போக்குகளை இந்த திரைப்படம் நன்றாக காட்சிப் படுத்தியுள்ளது. முக்கிய அரசியல் கட்சிகளும், அதன் கிராம அளவிலான நிர்வாகி களும் அப்படியே ஆவணப்படுத்தப் பட்டுள்ளனர். எழக்கூடிய முரண்பாடு கள் அனைத்திலும் வெறும் பார்வையா ளர்களாகவும், குளிர்காய்கிறவர்களா கவும் பிரதான அரசியல் கட்சிகள் இருப்ப தைப் பார்க்க முடிகிறது. தொழிலா ளர்கள், விவசாயத் தொழிலாளர்களின் வேலையிடம் மிக இயல்பான பின்னணி யாக இருப்பது பராரி திரைப்படத்தின் தனித்தன்மை. கடைசிக் காட்சியில் தான் தாக்கப்ப டும்போது இது ஏதோ நமக்கு மட்டும் நடப்பதல்ல, யதார்த்தத்தில் நாள்தோ றும் நம்மைச் சுற்றிலும் இத்தகைய தாக்குதல்களெல்லாம் எளிய மக்களின் மீது நிகழ்ந்து கொண்டிருப்பவைதான் என நாயகன் பேசும் காட்சி சமூக அவலங்களை துல்லியமாக அம்பலப்ப டுத்துகிறது. பெயர் சொல்லக் கூடிய பெரிய நடி கர்கள் யாருமில்லை, பெரிய அளவில் விளம்பரம் இல்லை. மிகக் குறைந்த செலவில் இப்படியொரு படத்தை எடுத்தி ருப்பது பாராட்ட வேண்டிய அம்சம். திரைக்கதையிலும், பாத்திரங்களின் நடிப்பிலும் பழைய பாணி இருந்த போதிலும், தனித்துவமான தனது அரசி யல் கருத்துக்களாலும், உச்சக் காட்சி யாலும் மிளிர்கிறது பராரி. படத்தின் பாடல்கள் ஷான் ரோல்டன் இசையில் சிறப்பாக உள்ளன. மனதை உலுக்கும் உச்சக் காட்சி இந்தியா முழு வதும் நடைபெற்ற பல்வேறு கும்பல் வன்முறைச் சம்பவங்களை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. கடைசி வரையிலும் அமர்ந்து திரையரங்கை விட்டு வெளியேறும் ஒரு பார்வையாள னுக்கு இந்தப் படம் மனிதத்தின் உயர்வையும், பிரிவினை அரசியல் மீதான வெறுப்பையும் கொடுக்கும் என்று உறுதியாகச் சொல்லலாம். படத்தை வழங்கியுள்ள ராஜு முருகன், இயக்குநர் எழில் பெரியவேடி, நடி கர்கள், நடிகைகள், காமிரா, படத் தொகுப்பு என இதன் பின்னணியில் நின்று உழைத்த அனைவரும் பாராட்டுக் குரியவர்கள். இதுபோன்ற திரைப்பட முயற்சிகள் தமிழ் சினிமாவில் அதிகரிப்பது நம்பிக்கை தருகிறது.